கும்பம் நவம்பர் மாத ராசி பலன் 2023..!

சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்; ராகு- கேது பெயர்ச்சியானது நிகழ்ந்துள்ளது. ராகு பகவான் 2 ஆம் இடத்தில் உள்ளார். குரு பகவான் 3 ஆம் இடத்தில் உள்ளார், குரு பகவானின் இட அமைவு உங்களுக்குச் சாதகமானதாக இல்லை. பொருளாதாரரீதியாக மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும்.

எந்தவொரு முதலீட்டைச் செய்யும்போதும் ஒருமுறைக்குப் பலமுறை யோசிக்கவும். பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்த்து சிறிய அளவில் முதலீடுகளைச் செய்யுங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பங்குச் சந்தை போன்ற அபாயகரமான முதலீடுகளைச் செய்யாதீர்கள். சுக்கிரன் 8 ஆம் இடத்தில் உள்ளார்; சுக்கிர பகவான் ஓரளவு உங்களுக்குச் சாதகமாக உள்ளார்.

தொழில், வேலை மாற்றம் போன்றவற்றிற்கு ஏற்ற காலமாக நவம்பர் மாதம் இல்லை. வேலைவாய்ப்பு என்று கொண்டால் புது வேலைக்கு முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது.

வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடனும், மேல் அதிகாரிகளுடனும் விட்டுக் கொடுத்துச் செல்லுதல் வேண்டும். கும்ப ராசியினைப் பொறுத்தவரை ராகு- கேது பெயர்ச்சியானது சிறு மன வருத்தத்தினைத் தருவதாய் அமைந்துள்ளது.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை கைகூடி வரும் என்று எதிர்பார்த்த வரன்களும் தட்டிப் போகும். மனம் தளராதீர்கள், தற்போதைக்குத் தற்காலிகமாக வரன் தேடும் விஷயத்தினை தள்ளிப் போடவும்.

காதலர்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டு பிரியும் நிலைக்குத் தள்ளப்படுவர். பொருளாதாரரீதியாக மந்தநிலை காணப்படும், பணம் கொடுக்கல் வாங்கலில் மிகக் கவனம் தேவை. இல்லையேல் தேவையில்லாத பிரச்சினைகளில் மாட்டிக் கொள்வீர்கள்.

இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொண்டு மாற்றம் எதையும் செய்யாமல் செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் குழப்பங்கள், கலகங்கள், கருத்து வேறுபாடுகள் மேலோங்கும். குடும்பத்தின் மீதான உங்களின் பொறுப்பு அதிகமாகும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. பெரிய அளவிலான மாற்றங்கள் எதையும் எதிர்பார்க்காமல் வாழுங்கள். மேலும் பயணங்களால் பெரிய அளவில் ஆதாயங்கள் எதுவும் ஏற்படாது; தேவையற்ற பண விரயத்தையும், உடல் அலைச்சலையும் கொடுக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.