கும்பம் மார்கழி மாத ராசி பலன் 2023!

கும்ப ராசி அன்பர்களே மார்கழி மாதத்தினைப் பொறுத்தவரை சிவபெருமான் வழிபாடு, பராசக்தி தேவி வழிபாடு செய்துவாருங்கள். லாபம், சந்தோஷம், அனுகூலம் அதிகரித்துக் காணப்படும். எடுத்த காரியத்தினை தைரியத்துடன் கையாள்வீர்கள். மேலும் அதில் வெற்றியும் பெறுவீர்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் இருந்துவந்த தடைகள் தவிடு பொடியாகும். ரத்த பந்த உறவுகளுக்குள் பணம் சார்ந்த பிரச்சினைகள், மனக் கசப்புகள் ஏற்படும். உறவுகளுக்குள்ளேயும், வெளியேயும் பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் திடீர் குழப்பங்கள் ஏற்படும்; குடும்ப உறுப்பினர்கள் மீதான உங்கள் பொறுப்பானது அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் என்று பார்க்கையில் நரம்பு சம்பந்தப்பட்ட உபத்திரங்கள் ஏற்படும். தினசரி நடைபயிற்சி மற்றும் உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

பிள்ளைகள் கல்வியில் மந்தநிலையில் காணப்படுவர். வேலைவாய்ப்பு என்று பார்க்கையில் பெரிதளவில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யாதீர்கள். இருக்கும் வேலையில் அப்படியே சில காலங்களுக்குத் தொடருங்கள்.

சக பணியாளர்களுடனும், மேல் அதிகாரிகளுடனும் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்தல் நல்லது. உடன் பிறப்புகளுடனான உறவில் இருந்துவந்த சிக்கல்கள் சரியாகும்.

பூர்விகச் சொத்துகள் உங்களுக்குப் பெரிய அளவிலான செலவுகளுக்கு இட்டுச் செல்லும், மேலும் வீடு கட்டி வந்தநிலையில் தற்போது அதனை கட்டி முடிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள்.

அரசின் கடனுதவிகள் தக்க சமயத்தில் கிடைக்காதது பெரும் தடங்கலாக இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களுக்குப் பெரும் உதவிகரமாக இருப்பர். நண்பர்களைத் தேர்வு செய்யும் போது மிகக் கவனத்துடன் இருத்தல் வேண்டும்.

கூடா நண்பர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். மேலும் வீட்டில் பெற்றோர், பெரியோர் சொல் கேட்டு நடத்தல் வேண்டும். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை; உங்களைக் குறித்த கவலை அவரிடத்து மேலோங்கி இருக்கும்.

திருமண காரியங்கள் இதுவரை தள்ளிப் போன நிலையில் அவை அனைத்தும் இனி சரியாகும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.