கும்பம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

கும்ப ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை சனி பகவான் வக்ர நிலையில் உள்ளார், சுக்கிர பகவான் வலுவாக அமைந்துள்ளார். சூர்ய பகவான் 10 ஆம் இடத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் பகவானுடன் இணைந்து இட அமர்வு செய்துள்ளார்.

குரு பகவான் உங்களுக்குச் சாதகமாக இல்லை; சனி பகவானும் சுக்கிர பகவானும் வலுவாக உங்களுக்குப் பக்கபலமாக உள்ளனர். சனி பகவான் மற்றும் சுக்கிர பகவானின் பார்வையால் நீங்கள் வலுவாக இருப்பதாக உணர்வீர்கள்; ஆனால் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை வலுவிழந்தவராக மாற்றுவார்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உணர்ச்சிரீதியாக மிகவும் தெளிவான சிந்தனை கொண்டு இருப்பீர்கள். புதன் பகவான் 11 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். உங்களின் அறிவுக்கூர்மையால் பல முக்கிய விஷயங்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் குறித்த திட்டங்களை சிறப்பாகத் தீட்டி துணிச்சலோடு செயல்படுத்திக் காட்டுவீர்கள்.

சனி பகவான் உங்களுக்குத் தைரியத்தினைக் கொடுப்பார். சுக்கிரன் உங்களுக்கு விபரீத ராஜ யோகத்தினை அள்ளிக் கொடுப்பார். நீங்கள் எட்ட முடியாது என்று நினைத்த பல விஷயங்களையும் எட்டிப்பிடிப்பீர்கள். வாழ்க்கையில் பல எதிர்பாராத மாற்றங்களையும் செய்வீர்கள்.

குரு பகவான் இட அமைவு சரிவர இல்லாவிட்டாலும் பெரிய அளவில் கவலை கொள்ள வேண்டியதில்லை; ஏனெனில் குரு பகவானை விடுத்து ஏனைய கிரகங்களும் உங்களுக்குச் சாதகமானதாகவே உள்ளது.

எதிர்காலம் குறித்த திட்டங்களுக்காக டிசம்பர் மாதத்தினை சரிவர பயன்படுத்துங்கள். மாற்றம் வேண்டுவோர் டிசம்பர் மாதத்தில் அனைத்து முயற்சிகளையும் செய்யலாம்.

திருமண காரியங்களைப் பொறுத்தவரை தயங்காமல் வரன் தேடலாம்; ஆனால் வரவிருக்கும் வரனுக்கு தோஷம் எதுவும் இல்லாவிட்டால் நீங்கள் தைரியமாக வரனை முடிக்கலாம்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வண்டி, வாகனங்கள் வாங்க நினைப்போர் தயங்காமல் வாங்கலாம். கடந்த மாதங்களில் பல போராட்டங்களைச் சந்தித்த உங்களுக்கு டிசம்பர் மாதம் நிம்மதியினையும் மன மகிழ்ச்சியினையும் வெற்றியினையும் கைமேல் கொடுக்கும் மாதமாக இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.