கும்பம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

கும்ப ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை தடங்கல்கள் நிறைந்த மாதமாக இருக்கும். புதன்- சுக்கிரனின் பார்வை நேர்மறையான விஷயங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கும், சுக்கிரன் 8 ஆம் தேதிக்குப் பின் வக்ரம் அடைகிறார். பொருளாதாரம் என்று கொண்டால் செலவினங்கள் மிக அதிகமாகவே இருக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

தங்க நகை முதலீடு, வீடு, மனை சார்ந்த முதலீடுகள் என தேவையான செலவுகளைச் செய்து விடுங்கள். சம்பளத்தின் முதல் செலவு என சேமிப்பில் முழுவதுமாகக் களம் இறங்கி விடுங்கள்; இல்லையேல் காசு கரைந்து போகும்.

திருமண காரியங்களில் இழுபறி நீடிக்கும். வேலைவாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முயற்சிகளைச் செய்யுங்கள். மாணவர்களைப் பொறுத்தவரை எந்தவொரு டென்சனையும் மூளையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.

மேலும் குழந்தைகள் உங்கள் சொல் பேச்சுக் கேட்டு நடக்கமாட்டார்கள், மிகவும் அலட்சியமாகச் செயல்படுவார்கள். குடும்ப உறுப்பினர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வர். இது உங்களுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கும். உங்கள் மீதான பொறுப்புகள் மன உளைச்சலைக் கொடுக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

உடன் பிறப்புகளுடன் பிரச்சினைகள், பிரிவுகள் ஏற்படும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை மன வெறுமையுடன் காணப்படுவர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews