கும்பம் ஆடி மாத ராசி பலன் 2023!

ஆடி மாதத்தினைப் பொறுத்தவரை சூர்யன் சிம்ம ராசிக்குப் பெயர்கிறார்; சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்; புதன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன்- சூர்யன் சேர்க்கை கடன் சார்ந்த விஷயங்களில் இருந்த பல பிரச்சினைகளைக் குறைக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும்; மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தாய்- தந்தையரின் உடல் நலனில் அக்கறை தேவை.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மேலும் கையில் இருக்கும் பணம் விறுவிறுவென செலவு ஆவதுடன், கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வீண் அலைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு; வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதி, சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

மன நிம்மதி குறைந்ததாக உணர்வீர்கள்; ஆனால் சந்திர பகவான் அவ்வப்போது சிறு சிறு சந்தோஷங்களைக் கொடுக்கவும் செய்வார். எடுத்த காரியங்களில் தடையினை சனி பகவான் ஏற்படுத்துவார்; மேலும் உங்களின் தவறான முடிவுகள் பல இழப்புகளை ஏற்படுத்தச் செய்யும்.

தொழில்ரீதியாக எடுத்துக் கொண்டால் பங்குதாரர்களுடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தொழில்ரீதியாக எந்தவொரு புது முதலீட்டையும் செய்ய வேண்டாம்; நிச்சயம் அது நஷ்டத்தில் முடிவடைவதாக இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வேலைவாய்ப்புரீதியாக எதிர்பாராத இடமாற்றம் உங்களுக்கு நெருக்கடியினைக் கொடுப்பதாய் இருக்கும். நட்பு வட்டாரத்தில் அவப் பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews