போடு வெடிய… கவர்மெண்டு கையில் சென்ற ஓடிடி தளம்.. எந்த மாநிலத்தில் தெரியுமா?

மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை சினிமாத்துறை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. ஆரம்ப காலகட்டங்களில் தாதா சாகேப், சத்யஜித்ரே காலங்களில் மௌனப் படங்களாக திரையில் வந்து கொண்டிருந்த சினிமா மெல்ல மெல்ல தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள ஆரம்பித்தது. மௌனப் படங்களில் காலகட்டத்திற்குப் பிறகு பேசும் படங்கள் வர ஆரம்பித்தன.

இந்தக் காலகட்டத்தில் தான் சினிமா அசுர வளர்ச்சி அடைந்தது. பிலிம்ரோல்களில் படப்பிடிப்பு செய்து பின்னர் வசனங்கள் பேசி திரையிட்ட பொழுது அந்தக் கால மக்கள் வாயைப் பிளந்து பார்த்தனர். தொடர்ந்து பல படங்கள் கருப்பு வெள்ளையில் வர ஆரம்பித்தது. அதன்பின் ஈஸ்ட்மென்ட் கலர் எனப்படும் பிங்க் கலரில் படங்கள் வந்தன.

பின்னர் சிறிய திரையில் காட்டப்பட்ட படங்கள் முதன் முதலாக பெரிய ஸ்கீரீனில் ஒளிபரப்பாகும் அளவிற்கு வளர்ந்தது. தொடர்ந்து முழு வண்ணத்தில் படங்கள் வெளியான போது மக்கள் ரசித்துப் பார்த்தனர். மேலும் திரையரங்குகளும் நிறைய கட்டப்பட்டது. ரேடியோப் பெட்டிகளே கதி என்றிருந்த மக்களை சினிமா என்னும் ஊடகம் வெகுவாக ஈர்த்தது.

பல ஹிட் படங்களாலும், திறமைமிக்க சினிமா கலைஞர்களாலும் திரையரங்குகளில் கூட்டம் மொய்த்தது. 2000 ஆண்டுக்குப் பின்னர் சினிமாவின் உலகமே மாறிது. ஒன்று டிஜிட்டல் முறை, மற்றொன்று இணையதளம். இவை இரண்டும் சினிமாவின் முகத்தையே மாற்றின. இன்னும் அதிக அளவில் சினிமாத்துறைக்கு வர ஆரம்பித்தனர்.

மறுபடியும் லுங்கியா.. ஆளை விடுங்க.. கும்பிடு போட்ட கார்த்திக்கு ‘பையா‘ கதையைச் செதுக்கிய லிங்குசாமி

இணையங்களிலும் சினிமாப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. பின்னர் யூ டியூப் வர மொத்த சினிமாவும் இணையத்திற்குள் அடங்கிப் போனது. இதனால் திரையரங்குகள் பல மூடுவிழா கண்டது. சில திரையரங்குகள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களாக தன்னை மாற்றிக் கொண்டது. எல்லாவற்றிற்கும் மேலாக ஓடிடி தளங்கள் வந்தன. புதிய திரைப்படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டதால் மக்கள் திரையரங்கு செல்வதைத் தவிர்த்தனர்.

குறைந்த செலவில் ஓடிடி தளங்கள் மக்களுக்கு புது அனுபவத்தை வழங்கியது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ், அமேசான்,டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற பிரபல ஓடிடி நிறுவனங்களுக்குப் போட்டியாக அரசே ஓடிடி தளத்தினை ஆரம்பித்துள்ளது. எந்த மாநிலத்தில் தெரியுமா? தற்போது மலையாள சினிமாக்களை தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோமே அந்த கேரளத்தில் தான்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் உள்ள கைராலி திரையரங்கில் கேரள அரசுக்குச் சொந்தமான ஓடிடி தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளார். C SPACE எனப்படும் இந்த ஓடிடி தளத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெறும். மேலும் விருது வாங்கிய திரைப்படங்கள் ஆவணப்படங்கள் உள்ளிட்டவையும் ஒளிபரப்பப்பட உள்ளது. கேரள அரசின் கலாச்சாரத் துறை மூலமாக நிர்வகிக்கப்படும் இந்தத் தளம் புதிய படங்களுக்கும் அனுமதி வழங்குகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews