சிகரெட் கவரில் பாட்டு வரிகள்.. கழிவறையில் பாடல் எழுதிய கண்ணதாசன்.. உடனடியாக MSV செஞ்ச விஷயம்..

தமிழ் சினிமாவின் சிறந்த கவிஞர் மற்றும் பாடலாசிரியர் என கவிஞர் கண்ணதாசனை நிச்சயம் சொல்லலாம். அவரது காலம் கடந்து பல ஆண்டுகளில் புதிய புதிய பாடலாசிரியர்கள் பலர் தமிழ் சினிமாவில் தோன்றி இருந்தாலும் கண்ணதாசன் இடத்தை நிரப்புவது மிக கடினம். அதே போல, கண்ணதாசனின் பாடல் வரிகளில் வெறுமென படத்தின் கதைக்கு தேவையான விஷயங்கள் மட்டும் இடம்பெறாமல், அதன் மூலம் சிறந்த விஷயத்தை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு போய் புகுத்த முடியும் என்பதை நினைத்தும் எழுதுவார்.

இன்னொரு பக்கம், குறிப்பிட்ட பாடலின் வரிகளை எழுதும் போது நிஜ வாழ்க்கையில் ஏதாவது பிரபலங்களுடன் பிரச்சனை உருவாகி இருந்தால் அதனை கூட மிகவும் கேலியாக பாடல் வரிகளில் பயன்படுத்தி மாயாஜாலம் காட்டுவார். கண்ணதாசன் அப்படி செய்த மாயாஜாலங்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதே போல, தனது திரை பயணத்தில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கலைஞர் கருணாநிதி, இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி என பலருடன் பணியாற்றிய அனுபவமும் கண்ணதாசனுக்கு உண்டு.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன், கண்ணதாசன் கழிவறையில் எழுதிய பாடல் ஒன்றை குறித்து நேர்காணல் ஒன்றில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “ஒரு படத்தின் கம்போசிங் முடிந்து அதற்கான டியூனையும் நாங்கள் கண்ணதாசனிடம் காட்டினோம். அதனை திரும்ப திரும்ப கேட்ட கண்ணதாசன், தனக்கு கொஞ்ச நேரம் வேண்டும் என்றும் ஏதோ சரி இல்லாதது போல் இருக்கிறது என்றும் கூறினார். அப்போது வயிறு சரியில்லை எனக்கூறி கழிவறை எங்கே இருக்கிறது என கண்ணதாசன் கேட்டார்.
Kavignar Kannadasan

முதலில் வெஸ்டர்ன் டாய்லெட்டை நாங்கள் காட்டியதும் அங்கே வேண்டாம், ‘தமிழன் கக்கூஸ்’ தான் வேண்டுமென கூறினார். தொடர்ந்து, அதும் கிடைக்க உள்ளே சென்ற கண்ணதாசனுக்கு டியூனுக்கான வரிகளும் கிடைத்துள்ளது. எதில் எழுத வேண்டுமென யோசித்த கண்ணதாசன், கையில் இருந்த சிகரெட் பாக்கெட்டின் கவரில் எழுதி உள்ளார். அங்கே பல்லவிக்கான வரிகள் கிடைக்க, வெளியே வந்த கண்ணதாசன், அதனை எம்.எஸ். விஸ்வநாதனிடம் நீட்டி உள்ளார். சிகெரெட் பாக்கெட் என்பதால் அதனை எம்.எஸ். விஸ்வநாதன் தொடாமல் இன்னொருவரை வைத்து அந்த வரிகளை பேப்பரில் எழுத செய்தார்.

மேலும், கழிவறையில் இருந்து யோசித்த போது வரிகள் சிக்கியதாகவும் அதனை அப்படியே எழுதி வைத்துக் கொண்டதாகவும் கண்ணதாசன் கூறினார். அவர் எப்போதும் இப்படி தான். தனக்கு தோன்றும் வரிகளை எதிலாவது எழுதி வைத்து கொள்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்” என ஏவிஎம் சரவணன் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews