கன்னி ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. கன்னி ராசி அன்பர்களே! பெயர்ச்சியின்போது ராகு பகவான் 8 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்திற்குப் பெயர்கிறார். யோகக் காரகர் 7 ஆம் இடத்திலும், ஞானக்காரகரான கேது பகவான் ஜென்மத்திலும் இட அமர்வு செய்யவுள்ளனர்.

துறவு வாழ்க்கை, சன்னியாச வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தினை கேது பகவான் உங்களுக்குக் கொடுப்பார். மேலும் வீடு, மனை போன்ற பொருட்களை யாருக்கேனும் கொடுக்கலாமா என்று பொருள் சார்ந்த ஈடுபாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்ப வாழ்க்கை என்று கொண்டால் கணவன்- மனைவி இடையேயான புரிதல் குறையும்; சரியான புரிதலின்மையால் சிறு சிறு விஷயங்களும் பெரும் குறைகளாகவும், பிரச்சினைகளாகவும் பார்க்கப்படும்.

கன்னி ராசியினைப் பொறுத்தவரை 1 மற்றும் 7 ஆம் இடங்களில் கேது பகவானும், ராகு பகவானும் அமரும் இந்தப் பெயர்ச்சியானது ஏறுக்குமாறான பெயர்ச்சியாக உள்ளது.

அதனால் நாம் ஒன்று நினைக்க நமக்கு ஒன்று நடக்கின்றதே என்ற வருத்தம் உங்களிடத்தில் அதிகமாக இருக்கும். நினைத்த வேகத்தில் எதுவும் நடக்காது.

மேலும் உறவுகளும் நாம் எதிர்பார்த்தது போல் அமையவில்லை; வேலை வாய்ப்பு என்று கொண்டால் பரவாயில்லை என்று சொல்லிக் கொள்ளும் அளவிலே நிலைமையானது இருக்கும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் கண், மூக்கு, தொண்டை மற்றும் தோல் சார்ந்த பிரச்சினைகள் அதிக அளவில் ஏற்படும். எதிர்பார்க்கும் விஷயங்கள் நடக்காமல் போவதால் உங்களிடம் ஏமாற்றம் அதிக அளவில் இருக்கும்.

அதிக அளவில் எதிர்மறையான எண்ணங்கள் உங்களை ஆட்கொள்ளும். தினமும் காலையில் எழுந்து தியானம், யோகா போன்றவற்றினைச் செய்யுங்கள்; மேலும் அருகில் உள்ள கோயிலுக்குத் தினசரி என்ற அளவில் சென்று வாருங்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் குல தெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று கடவுளை வழிபட்டு வாருங்கள்; நிலுவையில் இருக்கும் நிவர்த்திக் கடனைச் செய்யுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews