கன்னி நவம்பர் மாத ராசி பலன் 2023..!

ராகு- கேது இடப் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. கன்னியில் கேது பகவான் உள்ளார். 7 ஆம் இடத்தில் ராகு பகவான், குரு பகவான் 8 ஆம் இடத்தில், சனி பகவான் 6 ஆம் இடத்தில் , புதன் பகவான் – செவ்வாய் பகவான்- சூர்ய பகவான் 2 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளனர்.

செவ்வாய் மற்றும் சூர்ய பகவான் 2 ஆம் இடத்தில் இருந்து 3 ஆம் இடத்திற்குப் பெயர்வதால் பலவிதமான தடைகளும் தகர்ந்து போகும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மாற்றம் எதையும் தற்போதைக்குச் செய்யாதீர்கள். இருக்கும் வேலையினை விட்டு புது வேலைக்குச் செல்ல வேண்டாம்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

மேலும் வேலை செய்யும் இடத்தில் தேவையான இடங்களில் மட்டுமே உங்களின் கருத்துகளைக் கூறவும், வாக்குவாதங்களை அறவே தவிர்த்து விடுங்கள்.

குடும்பத்தின் தேவைகளை முடிந்தளவு பூர்த்தி செய்வீர்கள். 7 ஆம் இடத்தில் இருக்கும் ராகு பகவான் உங்களுக்குத் தடைகளைத் தொடர்ந்து கொடுப்பார்.

சுக்கிர பகவான் நீச்சம் அடைந்து உங்களின் பலத்தினைக் குறைக்கிறார். வாக்கு பலம், பொருளாதார பலன்களை சுக்கிர பகவான் அறவே குறைக்கிறார். வாக்குறுதிகள் கொடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுங்கள். இது நிச்சயம் உங்களைப் பிரச்சினையில் தள்ளிவிடும்.

புதிதாக வீடு வாங்குதல், கார் வாங்குதல், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குதல், தங்கநகைகள் வாங்குதல் என உங்கள் மனம் பல ஆசைகளைக் கொண்டு இருக்கும். ஆனால் நவம்பர் மாதத்தில் புதுத் திட்டங்கள் எதையும் செயல்படுத்த விடாமல் கிரகங்கள் செய்வர்.

இருக்கும் வேலை, இருக்கும் தொழில், இருக்கும் வருமானத்தில் வாழ்க்கையினை வாழ்ந்து விடுங்கள்; பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் பெரும் மன சங்கடத்தினையே கொடுக்கும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மாணவர்களைப் பொறுத்தவரை புதன் பகவானின் பார்வையால் ஓரளவு சாதகமானதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் என்று பார்க்கையில் வீண் விரயச் செலவுகள் இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் பூரண திருப்தி இல்லையே என்ற எண்ணம் மனதில் மேலோங்கி நிற்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews