கன்னி மார்கழி மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசி அன்பர்களுக்கு யோகம் நிறைந்த காலகட்டமாக மார்கழி மாதம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெற்றோர் மற்றும் பெரியோர்களுடன் வாக்குவாதங்கள் கூடாது. தாய் வழி மற்றும் தந்தை வழி உறவுகளுக்குள் உங்களுடைய பட்டென்ற பேச்சால் விரிசல் ஏற்படும்.

வீடு, மனை சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். பலருக்கும் தங்களுடைய நீண்ட நாள் கனவான வீடு வாங்குதல் என்ற கனவானது நிறைவேறும். பாதி கட்டி முடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள வீட்டினை முழுமையாகக் கட்டி முடிக்க தேவையான கடனுதவிகள் கிடைக்கப் பெறும்.

பொருளாதாரரீதியாக பணவரவு அதிகரிக்கும்; அசையும், அசையாச் சொத்துகள் ரீதியாக முதலீடுகளைச் செய்வீர்கள். தொழில் ரீதியாக முதலீடுகளைச் செய்து புதுத் தொழில் துவங்குதல், இருக்கும் தொழிலை அபிவிருத்தி செய்தல், ஒரு தொழிலில் இருந்து மற்றொரு தொழிலுக்கு மாறுதல் என்பது போன்ற விஷயங்களைச் செய்வீர்கள்.

குடும்பத்தில் அந்நியர்களின் தலையீட்டால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். சத்ருக்களால் இருந்துவந்த நிம்மதியற்ற தன்மையானது மாறும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நற் செய்தி கிடைக்கப் பெறும்.

நீண்ட நாட்களாக உங்கள் வாழ்வில் இருந்துவந்த கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும்; நீங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படுவீர்கள். செய்யும் வேலையினை மிகவும் தைரியத்துடன் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

தொலைதூரத்தில் இருந்து நற் செய்திகள் வந்து சேரும். பூமி சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த சிக்கல்கள் தீரும். உங்களின் பங்குதாரர்கள் பிரச்சினைகளை முடித்து சமாதானத்திற்கு வருவர்.

மேல் அதிகாரிகளுடன் இருந்துவந்த பிரச்சினைகள், சங்கடங்கள் தீரும். சக பணியாளர்கள் உங்களுடைய மோசமான காலகட்டங்களில் உங்களுக்கு ஆறுதலாக இருப்பர்.

திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாய் இருக்கும். அனைத்தையும் சமாளித்துக் கொள்ளலாம் என்ற தைரியம் உங்களிடத்தில் அதிகரிக்கும்.

பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகக் கவனம் தேவை. புதிதான அல்லது ஒவ்வானை கொண்ட உணவு விஷயங்களை தவிர்த்தல் நல்லது.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.