கன்னி ஜூலை மாத ராசி பலன் 2023!

கன்னி ராசி அன்பர்களே! மாறுதல்கள் மற்றும் முன்னேற்றங்களைப் பெரிய அளவில் எதிர்பார்க்காதீர்கள். குரு பகவான்  8 ஆம் இடத்தில் விரயச் செலவுகள் அதிக அளவில் ஏற்படும், முடிந்தளவு விரயச் செலவுகளை பயனுள்ள செலவுகளாக மாற்றிக் கொள்ளுதல் நல்லது.

செவ்வாய் பகவான் 12 ஆம் இடத்திலும் குரு பகவான் 8 ஆம் இடத்திலும் உள்ளனர். திருமண காரியங்களைப் பொறுத்தவரை நீங்கள் தேடிப் போகும் வரனை எதிர்த்தரப்பினர் நிராகரிப்பர்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

உங்களைத் தேடிவரும் வரன் உங்களுக்குப் பிடித்தாற்போல் இராது. இருதரப்பிலும் வரன் பிடித்தாலும் அதுவும் தடங்கல்களால் நின்று போகும் நிலைக்குத் தள்ளப்படும்.

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான சிறு சிறு வாக்குவாதங்களும் பெரும் பிரச்சினைகளாக மாறும். உடன் பிறப்புகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாகச் செலவினங்கள் ஏற்படும்; உயர்கல்வி ரீதியாகச் சரியான படிப்பினைத் தேர்வு செய்து படிப்பீர்கள். ஆனால் கவனம் சிதறாமல் முழுக் கவனத்துடன் படித்தல் நல்லது. இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் கஷ்டப்படுவர்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

பொருளாதார ஆதரவும் பெரிதளவில் இல்லை, அதிக அளவில் சகிப்புத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews