கன்னி டிசம்பர் மாத ராசி பலன் 2023!

கன்னி ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை புதன் பகவான் கேந்திரத்தில் உள்ளார். மேலும் புதன் பகவான் வக்கிரம் அடைகிறார். சுக்கிரன் 2 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். கன்னி ராசியினர் மகிழ்ச்சி வாய்ந்தவராக டிசம்பர் மாதத்தில் இருப்பர்.

நேர்மறையான எண்ணங்கள் அதிகரித்துக் காணப்படுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த சிறு சிறு பொருட்களை நீங்களே வாங்கி மகிழ்வீர்கள். இல்லையேல் உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்குக் கொடுத்து உங்களை மகிழ்விப்பார்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும், குடும்பத்துடன் அருகில் உள்ள இடங்களுக்குச் சுற்றுலா சென்று வருவீர்கள். ராகு பகவான் 7 ஆம் இடத்திலும், கேது பகவான் 1 ஆம் இடத்திலும் இட அமர்வு செய்துள்ளனர்.

ராகு பகவான் நீங்கள் செய்யும் விஷயங்களில் தடைகள் மற்றும் இழுபறிகளை ஏற்படுத்துவார். ஆனால் நீங்கள் பெரிதளவில் கவலை கொள்ளாது புன்னகையுடனேயே இதனைக் கடக்க முயற்சி செய்யுங்கள்.

மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் அதீத நாட்டத்துடன் காணப்படுவர். உயர் கல்வி சார்ந்த தேர்வுகளுக்காக மிகவும் ஆர்வத்துடன் படிப்பர். கல்விரீதியாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கப் பெறும்.

வீண் விரயச் செலவுகள் பல வகைகளில் ஏற்படும். முடிந்தளவு சேமிப்பில் கவனம் செலுத்திவிடுங்கள்; இல்லையேல் தங்கநகை வாங்குதல், வீடு, மனை வாங்க அட்வான்ஸ் கொடுத்தல் என்பது போன்ற விஷயங்களைச் செய்யுங்கள்.

உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் இருந்தாலும் நீங்கள் வெகு விரைவாக மீண்டு வருவீர்கள். உடற் பயிற்சி செய்தல், தியானம் செய்தல், யோகா செய்தல் என்பது போன்ற செயல்களைச் செய்தால் ஆரோக்கியமாக இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துங்கள்; திருமண காரியங்கள் என்று பார்க்கையில் ஓரளவு வரன் அமையப் பெறும்; கவலை கொள்ளாமல் பொறுமையாக வரன் பார்ப்பது நல்லது.

குல தெய்வக் கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்து வாருங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.