கன்னி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

கன்னி ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை புதன்- செவ்வாய்- சுக்கிரன் 12 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளனர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை புதிதாக முயற்சிக்காமல் இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் நல்லது.

மேல் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்தல் வேண்டும். வேலைப்பளு அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். தொழில்ரீதியாக பங்குதாரர்களால் பெரும் நஷ்டத்தினைச் சந்திப்பீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை சுமாரானதாகவே இருக்கும். குடும்பத்தின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும்; மேலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெரிதளவில் இருக்காது.

குழந்தைகளால் வீண் செலவுகள் ஏற்படும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் குழம்பிப் போய் இருப்பீர்கள். 8 ஆம் இடத்தில் ராகு- குரு பகவான் இடஅமர்வு செய்துள்ளனர்; உடல் ஆரோக்கியத்தினைப் பொறுத்தவரை கூடுதல் விழிப்புணர்வுடன் இருத்தல் நல்லது.

மாணவர்களைப் பொறுத்தவரை கவனச் சிதறல்கள் இருக்கும்; மேலும் ஒருமுறை படிக்க வேண்டிய இடத்தில் பலமுறை படித்தால் மனதில் நிற்கும். படிப்பில் ஈடுபாடு குறையும்; குழப்பங்கள் நிறைந்த பல முடிவுகளையும் எடுப்பீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை எதுவும் நினைத்ததுபோல் இல்லையே என்ற மன உளைச்சலில் இருப்பீர்கள், கிரகங்களின் நகர்வுகள் எதுவும் சாதகமாக இல்லை.

பூமி தொடர்பான முதலீடுகளைத் தவிர்த்தல் வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews