கன்னி ஆவணி மாத ராசி பலன் 2023!

கன்னி ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை அற்புதங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். ராசிநாதன் 12 ஆம் இடத்தில் இருப்பதால் உடல் நலக் குறைபாடுகள் ஏற்படும். ராசியில் செவ்வாய் பகவான் இருப்பதால் வழக்கத்திற்கு மாறான சுறு சுறுப்பு உங்களிடம் இருக்கும்.

குரு பகவான் 2 ஆம் இடத்தினைப் பார்ப்பதால் தனரீதியாக மிகச் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கல் மிகச் சிறப்பானதாக அமையும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும்; பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும் மாதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி காண்பீர்கள். ஒரு சிலர் வீடு கட்டுதல், வீடு வாங்குதல் போன்ற காரியங்களில் மும்முரமாகக் களம் இறங்குவீர்கள்.

தாயின் உடல் நலன்ரீதியாக செலவினங்கள் ஏற்படும். வண்டி, வாகனங்கள் ரீதியாகச் செலவினங்கள் ஏற்படும். மேலும் மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் கவனம் குறைந்து காணப்படுவர். குழந்தைகளால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும்.

குடும்பத்தின் மீதான உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் யோகம் ஏற்படும். 8 ஆம் இடத்தில் குரு பகவான் இருப்பதால் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பல ஆண்டுகளாக வராத கடன்கள் வசூலாகும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தொழிலில் இருந்துவந்த தொய்வுகள் குறையும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களின் அனுசரணை கிடைக்கும்.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை வாய்ப்புகள் கதவைத் தட்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews