அந்த காலத்துலயே ‘Thug Life’… காமராஜரை Cool பண்ண கண்ணதாசன் பயன்படுத்திய டெக்னிக்!

தமிழ் சினிமாவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான கலைஞர்கள் தோன்றி, தங்களுடைய திறனின் காரணமாக காலம் கடந்து நிலைத்து நிற்பார்கள். அந்த வகையில், நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ், கலைஞர் கருணாநிதி, இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன் என பலரது பெயரை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அதிலும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கவிஞர் மற்றும் பாடலாசிரியராக வலம் வந்தவர் கவிஞர் கண்ணதாசன். அனைத்து விதமான மக்களுக்கும் புரியும் வகையில் பாடல் வரிகளை எழுதி அதில் அற்புதமான கருத்துக்களையும் கடத்தக் கூடியவர்.

‘தெய்வம் தந்த வீடு’, ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’, ‘போனால் போகட்டும் போடா’ என கண்ணதாசனின் கைவண்ணத்தில் வந்த பல பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அது மட்டுமில்லாமல், ஒவ்வொரு பாடலின் வரிகளிலும் கண்ணதாசன் பயன்படுத்தும் வார்த்தைகளும் மிக அர்த்தமுள்ளதாக இருக்கும்.
Kanna

அந்த வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்காக பாடலில் கண்ணதாசன் செய்த அற்புதம் தொடர்பான செய்தி ஒன்று தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

அந்த காலத்தில் மக்களின் முதலமைச்சராக இருந்து தமிழ் அரசியல் வரலாற்றில் முக்கிய தலைவராக வலம் வந்தவர் கர்மவீரர் காமராஜர். முதலமைச்சர் என்ற தோரணை இல்லாமல் எளிமையான ஒருவரை போல மக்கள் மத்தியில் அவர் வலம் வந்தது தமிழகத்தின் கடைக்கோடி மக்கள் வரைக்கும் கொண்டு போய் சேர்த்தது.

அப்படி இருக்கையில், முதல்வர் காமராஜர் மற்றும் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் சிறந்த நண்பர்களாக வலம் வந்திருந்தனர். இதற்கு மத்தியில், சில மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தெரிகிறது. இருவரின் நட்பு மீண்டும் சேர சில வழி இருந்தும் அது நிறைவேறாமல் போனதாகவும் தெரிகிறது.
1 J1qIiSFQ0pSE t0jRLuGg

அந்த மாதிரி ஒரு சூழலில் தான் தனது பாடல் வரிகள் மூலம் காமராஜரை மறைமுகமாக நட்பு பாராட்ட ஒரு அசத்தலான யுக்தியை கையாண்டிருப்பார் கவிஞர் கண்ணதாசன். கர்மவீரர் காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி. இதனை துருப்புசீட்டாக எடுத்த கண்ணதாசன், பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில், ‘இந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என முதல் வரியிலேயே குறிப்பிட்டிருந்தார்.

தான் எந்த துறையில் புலியாக இருக்கிறோமோ அதையே பயன்படுத்தி தன்னிடம் பேசாமல் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருக்கு தூது சொன்ன கவிஞர் கண்ணதாசனின் திறம் பலரையும் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews