நான் நடித்ததில் இந்த கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும்… தன்யா ரவிச்சந்திரன் பகிர்வு…

பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரன் அவர்களின் பேத்தி தான் தன்யா ரவிச்சந்திரன். சிறு வயதிலிருந்தே தனது தாத்தாவின் நடிப்பை பார்த்து வளர்ந்த தன்யா ரவிச்சந்திரனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. இவரது தாயார் லாவண்யா ஸ்ரீராம் பாரம்பரிய நடன கலைஞர் ஆவார். தனது தாயிடம் இருந்து பாரதநாட்டியதைக் கற்றுத் தேர்ந்தார் தன்யா ரவிச்சந்திரன்.

2016 ஆம் ஆண்டு ‘பலே வெள்ளையத் தேவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பிருந்தாவனம்(2017), கருப்பன் ( 2017), நெஞ்சுக்கு நீதி ( 2022) ஆகிய படங்களில் நடித்தார்.

இது தவிர சில ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார் தன்யா ரவிச்சந்திரன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். இது தவிர 2022 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான ‘பேப்பர் ராக்கெட்’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

தன்யா ரவிச்சந்திரன் நடித்ததில் மிக பிரபலமானது ‘கருப்பன்’ திரைப்படத்தில் நடித்த ‘அன்பு’ கதாபாத்திரம் தான். இந்த படத்தில் இவரது நடிப்பும் இப்படத்தின் நாயகனான விஜய் சேதுபதி அவர்களுடனான தன்யாவின் கெமிஸ்ட்ரியும் வெகுவாக பாராட்டப்பட்டது. இப்படத்தின் பாடல்களும் கூட ஹிட்டானது.

தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் அவர்களுடன் இணைந்து ‘ரசவாதி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் தன்யா ரவிச்சந்திரன். இத்திரைப்படம் வருகிற மே 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரமோஷனுக்காக நேர்காணலில் கலந்துக் கொண்ட தன்யாவிடம் நீங்கள் நடித்த கதாபாத்திரத்தில் மிகவும் பிடித்தது எது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தன்யா, எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் நான் ‘கருப்பன்’ திரைப்படத்தில் நடித்த ‘அன்பு’ கதாபாத்திரம் தான் என்று கூறியுள்ளார் தன்யா ரவிச்சந்திரன்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...