ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட கமல்ஹாசன் படம்.. இப்படி ஒரு திகில் படம் இனி வருமா?

தமிழ் திரை உலகில் எத்தனையோ துப்பறியும் கதைகள் மற்றும் திகில் கதைகள் படமாக்கப்பட்டிருந்தாலும் ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்ட கமல்ஹாசன் நடித்த வெற்றிவிழா திரைப்படம் போன்று இன்னொரு படம் வருமா என்பது சந்தேகமே.

The Bourne Identity என்ற ஆங்கில நாவலை Robert Ludlu என்ற எழுத்தாளர் எழுதினார். இந்த துப்பறியும் நாவலை தழுவி தான் வெற்றி விழா என்ற பெயரில் படமாக்கப்பட்டது. சிவாஜி புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தை யார் இயக்கினால் சரியாக இருக்கும் என்ற பரிசீலனை சென்று கொண்டிருந்தபோது கமலஹாசன், பிரதாப் போத்தனை பரிந்துரை செய்ததாகவும் இதனை அடுத்து அவர் இந்த படத்தின் இயக்குனர் ஆனார்.

ஒரே தீபாவளியில் வெளியான 4 கமல்ஹாசன் படங்கள்.. எந்த வருடம்? என்னென்ன படங்கள்?

vetri vizha1

இந்த படத்தின் முதல் காட்சியில் கடற்கரை ஓரத்தில் மயக்க நிலையில் கமல்ஹாசன் இருக்க அவரை சௌகார் ஜானகி மற்றும் அவரது பேத்தி சசிகலா காப்பாற்றி அடைக்கலம் தருவார்கள். கண்விழித்து பார்த்த கமலுக்கு தான் யார் என்று தெரியாது. எல்லாமே மறந்து போயிருக்கும்.

இந்த நிலையில் தான் சசிகலா மற்றும் கமல்ஹாசன் இருவருக்கும் காதல் ஏற்படும். கமலஹாசன் தான் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிகள் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்த நிலையில், சின்னதாக ஒரு க்ளூ கிடைக்க அவர் சசிகலாவுடன் சென்னை வருவார்.

vetri vizha2

அப்போதுதான் அவரது பெயர் ஆண்டனி ராஜ் என்பது தெரியவரும். இந்த நிலையில் கமல்ஹாசனை ஒரு பக்கம் கொள்ளை கூட்டம் துரத்தும், இன்னொரு பக்கம் போலீஸ் துரத்தும், இதனால் தான் உண்மையிலேயே யார் என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கும்போது தான் டிஸ்கோ சாந்தி, ‘காவல்துறை அதிகாரி ராதாரவியை சந்தித்தால் நீங்கள் யார் என்பதை அவர் சொல்வார்’ என்று கூறுவார்.

இதனை அடுத்து கமல், ராதாரவியை சந்திக்கும்போது தான் உங்களுடைய உண்மையான பெயர் வெற்றிவேல், உங்களுடைய மனைவியை ஒரு கொள்ளை கும்பல் கொன்றுவிட்டது, கொள்ளை கும்பலை பிடிப்பதற்காக உங்களை கொள்ளை கும்பல்காரன் போலவே மாற்றினோம். கொள்ளை கும்பலில் ஆண்டனி ராஜ் என்ற பெயரில் நாங்கள் தான் சேர்த்தோம் என்று உண்மையை கூறுவார்.

vetri vizha3

இதனை அடுத்து தன் மனைவியை கொலை செய்த கொள்ளை கும்பலை பிடிக்க வேண்டும் என்ற வெறியுடன் அவர் கொள்ளை கும்பலை துரத்துவார். அப்போதுதான் அவர்களுக்கு பிரபு மற்றும் குஷ்பு ஜோடி உதவி செய்வார்கள். ஜிந்தா என்பவன் தான் கொள்ளை கூட்டத்தின் தலைவன் என்பதையும் அவன்தான் தன் மனைவியை கொன்றவன் என்பதையும் கமல்ஹாசன் கண்டுபிடிப்பார்.

தேசிய விருது பெற்ற படத்தை இயக்கிய ராதிகாவின் முன்னாள் கணவர்.. பிரதாப் போத்தனின் அறியாத பக்கங்கள்..!

கமலஹாசன் அவரை தேடிக் கொண்டிருப்பதை அறிந்த ஜிந்தா, குஷ்புவையும் சசிகலாவையும் கடத்திவிட்டு மிரட்டுவான். இதனை அடுத்து கமல் மற்றும் பிரபு இருவரும் களத்தில் இறங்கி இருவரும் குஷ்பு, சசிகலாவை காப்பாற்றி வில்லன் ஜிந்தாவை எப்படி அழிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

vetri vizha

படம் முழுவதும் திருப்புமுனை வந்து கொண்டே இருக்கும், ஒரு திருப்புமுனை பார்த்து நாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும்போதே அடுத்ததாக இன்னொரு திருப்புமுனை காட்சி வரும். ஆங்கில படத்துக்கு இணையாக இந்த படத்தை பிரதாப் போத்தன் இயக்கியிருப்பார்.

கமல்ஹாசன், அமலா, சசிகலா, பிரபு, குஷ்பூ, ராதா ரவி, டிஸ்கோ சாந்தி, ஜனகராஜ், சின்னி ஜெயந்த் ஆகியோர் நடித்த இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் வில்லன் கேரக்டர் என்றும் சொல்லலாம். ஜிந்தா என்ற கேரக்டரில் சலீம் கவுஸ் மிக அபாரமாக நடித்திருந்தார். அவர் வில்லனாக வசனம் பேசும்போது தியேட்டரில் கைதட்டல் எழுந்தது. அந்த அளவிற்கு அவரது நடிப்பு இந்த படத்தில் இருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சலீம் கவுஸ் பல படங்களில் வில்லனாக நடித்தார். குறிப்பாக சின்ன கவுண்டர் படத்தில் அசத்தலாக நடித்திருப்பார்.

vetri vizha

இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானது. ‘மாருகோ மாருகோ’, ‘பூங்காற்று உன் பேர் சொல்ல’, ‘வானம் என்ன’ ஆகிய பாடல்கள் இன்றும் பிரபலமாக உள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு இந்த படம் வெளியானது. பெரும்பாலான திரையரங்குகளில் 175 நாள் இந்த படம் ஓடியது. ஊடகங்கள் இந்த படத்தை கொண்டாடின.

இளையராஜா இசையமைக்காமல் இசையமைத்த படம்.. தேசிய விருது பெற்ற ‘வீடு’..!

இந்த படத்தால் சிவாஜி புரடொக்சன்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது. கமல்ஹாசனுடன் ஒரே ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பிரபு விரும்பியதால் சிவாஜி புரொடக்சன்ஸ் இந்த படத்தை தயாரித்தது. இந்த படம் வெளியாகி 40 ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் இது போன்ற ஒரு விறுவிறுப்பான திகில் படம் இன்னும் வரவில்லை என்பதுதான் இந்த படத்தின் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews