கடகம் ராகு – கேது பெயர்ச்சி ராசி பலன் 2023!

ராகு- கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி துவங்குகின்றது. கடக ராசி அன்பர்களே! ராகு பகவான் பெயர்ச்சிக்குப் பின்னர் குருவின் இடமான 9 ஆம் இடத்தில் இட அமர்வு செய்கிறார். எந்தவகையிலும் ராகு பகவான் உங்களின் யோகத்தினைக் குறைக்கப் போவதில்லை.

சுக்கிரன் உச்சமடையும் வீடான இந்த 9 ஆம் வீட்டில் கேது பகவான் இட அமர்வு செய்கிறார். பல வகைகளிலும் உங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறும். சனி பகவான் மட்டுமே உங்களுக்கு எதிர்ப்பாக உள்ளார், அவரும் வக்ரகதியினை அடைய உள்ளார். சனி பகவான் தடைகளை ஏற்படுத்தினாலும், ராகு பகவான் சகாயத்தினையே ஏற்படுத்திக் கொடுப்பார். கேது பகவான் சாதகமாகச் செயல்படுவார்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

ராகு- கேது பகவான் இடப் பெயர்ச்சியால் எதிர்பார்க்கும் ஆசையானது நிறைவேறும்;  உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும், தொடர்ந்து முன்னேற்றத்தினையே கொடுப்பார்.

கடக ராசியிலோ அல்லது கடக லக்கினத்திலோ பிறந்து இருந்தால் செல்வாக்கு அதிகரிக்கும். கடன், கஷ்டங்கள் உங்களின் கழுத்தை நெரிக்கும் நிலையில் இருந்தாலும், மற்றொருபுறம் உங்களுக்கு உதவும் நண்பர்கள் கிடைப்பர்.

நண்பர்கள், உறவினர்கள், உடன் பிறப்புகள் எனப் பலரும் உங்களுக்கு இக்கட்டான நேரத்தில் கைகொடுப்பர். கேட்காமலேயே கிடைத்தல், கேட்டதைவிட அதிகமாகக் கிடைத்தல், கேட்டது எதிர்பாராத நேரத்தில் கிடைத்தல் எனப் பல வகைகளிலும் ராகு பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டங்களைக் கொடுத்து மகிழ்விப்பார்.

ராகு- கேது பகவான் தரும் நன்மைகள் உங்களின் மன பாரத்தினைக் குறைப்பதாய் இருக்கும். கல்விரீதியாக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் எப்பேர்பட்ட பிரச்சினைகளையும் கடப்பர்.

கல்வி, குடும்ப வாழ்க்கை, வேலைவாய்ப்பு, தொழில் எனப் பல வகைகளிலும் ராகு- கேது உங்களுக்கு ஆதாயங்களையே ஏற்படுத்திக் கொடுப்பர்.

கடந்த காலங்களில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பலவகையான பிரச்சினைகளை எதிர்கொண்டு இருப்பீர்கள்; தற்போது ராகு- கேது இடப் பெயர்ச்சி உங்களுக்கு கெட்டது நடக்காமல் காப்பாற்றும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மனதினைப் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். பெரிய அளவில் சந்தோஷங்கள் இல்லாவிட்டாலும் சிறு சிறு சந்தோஷங்களால் மன நிறைவு காண்பீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews