கடகம் நவம்பர் மாத ராசி பலன் 2023..!

8 ஆம் இடத்தில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்; 10 ஆம் இடத்தில் குரு பகவான் உள்ளார். ராகு- கேது இடப் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. கடக ராசியினைப் பொறுத்தவரை நவம்பர் மாதத்தில் ராகு- கேது பெயர்ச்சிதான் உங்களுக்கு சற்று ஆறுதலான விஷயங்களைச் செய்வதாக இருக்கும்.

செவ்வாய் பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்குப் பெயர்ந்துவிடுவார். செவ்வாய் பலமாக இருக்கும் மாதம் என்பதால் கடகத்திற்குச் சாதகமான மாதமாக இருக்கும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இருக்கும் வேலையினைத் தக்க வைத்துக் கொள்தல் வேண்டும். புதிய மாற்றங்கள் எதையும் தற்போதைக்குச் செய்யாதீர்கள்.

சூர்ய பகவான் மாதத் துவக்கத்தில் நீச்சம் அடைந்து காணப்படுவார். அதன் பின் விருச்சிகத்திற்குப் பெயர்ந்து நீச்ச பங்கம் அடைகிறார். சனி பகவான் 8 ஆம் இடத்தில் இருப்பதால் பல வகையான கலகத்தினை ஏற்படுத்தி விடுவார். அதிலும் குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் பலவிதமான குழப்பங்களை ஏற்படுத்துவார்.

கணவன்- மனைவி இடையேயான சிறு சிறு வாக்குவாதம் சார்ந்த பேச்சு வார்த்தைகள் பெரும் பிரிவினையை ஏற்படுத்திவிடும். மேலும் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்படாமல் சற்று விலகியே இருப்பர்.

வீண் பேச்சுகள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திவிடும். பயணங்களில் சிக்கல்கள் ஏற்படும். ராகு- கேது இடப் பெயர்ச்சியானது ஏற்கனவே இருந்த தடைகளைக் களைப்பதாய் இருக்கும்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் புதுவித உணவுகளில் கவனம் தேவை, மேலும் புதுவிதமான திடீர் உடற் பயிற்சிகள் மேற்கொள்ளும்போது படிப்படியாகப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. இரவு நேரங்களில் வண்டி, வாகனப் பயணங்கள் மேற்கொள்வதை அறவே தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் மிகவும் திறமையுடன் செயல்படுவர். சிறப்பான மதிப்பெண்களைப் பெறவும் செய்வர். உயர் கல்வி சார்ந்த முடிவுகளைப் பல வகைகளிலும் ஆராய்ந்து சிறப்பான முடிவுகளை எடுப்பர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews