கடகம் மார்கழி மாத ராசி பலன் 2023!

மிதுன ராசி அன்பர்களே மார்கழி மாதத்தினைப் பொறுத்தவரை விநாயகர் வழிபாடு மற்றும் சிவ பெருமான வழிபாடு மிகப் பெரும் அனுகூலங்களை உங்களுக்குக் கொடுப்பதாய் இருக்கும்.

மகான்கள் வழிபாடு மிக மிக முக்கியம். தொட்டது துலங்கும் மாதமாக மார்கழி மாதம் உங்களுக்கு இருக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். அஷ்டமச் சனி காலம் என்று நீங்கள் வருத்தம் கொள்ள வேண்டாம்.

வண்டி, வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. இரவு நேர வண்டி, வாகனப் பயணங்களை முடிந்தளவு தவிர்க்கவும்.

வாழ்க்கைத் துணையின் தேக ஆரோக்கியத்தில் சிறு சிறு உடல் தொந்தரவுகள் ஏற்படும். சிறு சிறு உடல் தொந்தரவுகளாக இருக்கும்போதே கவனம் செலுத்துங்கள்; இல்லையேல் அது பெரும் விளைவுகளுக்கு உங்களை இட்டுச் செல்லும்.

முதுகுத் தண்டு மற்றும் கழுத்துப் பகுதி சார்ந்த இடங்களில் தொடர் பாதிப்புகள் இருப்பதாய் உணர்வீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் கோபம் வேண்டாம்; குழந்தைகள் கல்விரீதியாக மந்தநிலையுடன் காணப்படுவர். பிள்ளைகளிடம் கடும் சொல் பேசுவதால் மனக் கசப்பு ஏற்பட்டுவிடும்.

வேலைவாய்ப்பு ரீதியாக உங்களுக்குத் தோன்றும் மாற்றங்களைச் செய்யலாம், புதிய வேலை தேடுதல், இருக்கும் வேலையில் இருந்து மாற்றம் செய்தல், பதவி உயர்வுக்கு முயற்சித்தல் என நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் உங்களுக்கு சிறப்பான முடிவுகளைக் கொடுப்பதாய் இருக்கும்.

நீங்கள் புதிதாக செய்யும் முயற்சிகள் பலவும் உங்களுக்கு வெற்றியினைக் கொடுப்பதாய் இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூருக்குச் சுற்றுலா செல்வீர்கள்.

தந்தையுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவீர்கள்; நண்பர்களால் உங்களுக்குத் தக்க நேரத்தில் உதவிகள் கிடைக்கப் பெறும். தொழில் ரீதியாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த அரசின் கடனுதவிகள் மானியத்துடன் கிடைக்கப் பெறும்.

இல்லத்தரசிகள் தங்கநகை சார்ந்த முதலீடுகளைச் செய்வீர்கள். உங்களுக்கு குடும்பத்தின் மீதான பொறுப்புகள் ஒருபுறம் அதிகரித்தாலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மற்றொருபுறம் அதிகரிக்கும்.

2024 உங்களுக்கு எப்படி இருக்கும்? புத்தாண்டு பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.