கடகம் டிசம்பர் மாத ராசி பலன் 2023!

கடக ராசி அன்பர்களே! டிசம்பர் மாதத்தினைப் பொறுத்தவரை சந்திர பகவானின் பார்வையால் மனதளவில் மிகத் தெளிவாக இருப்பீர்கள். சூர்ய பகவான் செவ்வாய் பகவானுடன் இணைந்து 5 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். புதன் பகவான் 6 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்.

கடகத்திற்கு சனி பகவான் 8 ஆம் இடத்தில் உள்ளார். குரு பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார். ராகு பகவான் 9 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். கேது பகவான் 3 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சுக்கிர பகவான் 4 ஆம் இடத்தில் இட அமர்வு செய்துள்ளார். சனி பகவானைத் தவிர இதர கிரகங்கள் அனைத்தும் உங்களுக்குச் சாதகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சனி பகவான் உங்களுக்குக் கடும் சோதனைகளை ஏற்படுத்துவார்; நீங்கள் ஒரு திட்டம் தீட்டும் இடத்தில் மூன்று திட்டங்களைத் தீட்டுங்கள்; ஒன்று தோல்வி அடையும் பட்சத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது திட்டத்தினைச் செயல்படுத்துங்கள்.

தடை மட்டுமின்றி தாமதங்களையும் ஏற்படுத்துவார் சனி பகவான். பலன் நிச்சயம் கிடைக்கும் ஆனால் சற்று தாமதத்துடன் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்களின் பொறுமையால் மட்டும் இதனை எதிர்கொள்ள முடியும்.

வரவிருக்கும் தடைகளை எதிர்கொள்ள மனதில் உறுதி வேண்டும், தைரியத்துடன் செயல்படுவது நல்லது. பிறருக்கு நீங்கள் உதவி செய்தால், பிறரின் தடைகளை, பிரச்சினைகளை நீங்கள் களைய உதவினால் சனி பகவான் உங்களுக்கு உதவுவார்.

டிசம்பர் மாதத்தில் முதல் 21 நாட்கள் மிகச் சாதகமான மாதமாகவே இருக்கும். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை மேல் அதிகாரிகளுடனும், சக பணியாளர்களுடனும் தேவையற்ற பேச்சுகள் மற்றும் வாக்குவாதங்களைத் தவிர்த்திட வேண்டும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

எதிர்பார்த்ததுபோல் திருமண வரன் அமையப் பெறும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.