கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2023!

கடக ராசி அன்பர்களே! ஆகஸ்ட் மாதத்தினைப் பொறுத்தவரை கிரகங்களின் இட அமர்வு மிகவும் வலுவாக உள்ளது. சனி பகவான் 8ஆம் இடத்தில் இருப்பதால் தொழில்ரீதியாக எந்தவொரு முதலீட்டைச் செய்யும்போதும் மிகக் கவனமாக இருத்தல் நல்லது.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை இருந்த வேலைப்பளு குறையும். புதிதாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கப் பெறும். மேல் அதிகாரிகளின் பாராட்டினைப் பெறுவீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

திருமண காரியம் என்று கொண்டால் சிறு சிறு தடங்கல்கள் இருக்கும்; ஆனால் சாதூர்யமாகச் செயல்பட்டு தடைகளைக் கடப்பீர்கள். மாணவர்களைப் பொறுத்தவரை உங்களின் உயர்கல்விரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகளில் பிறர் தலையீட்டைத் தவிர்க்கவும். இல்லையேல் நிச்சயம் இது குழப்பத்தினையே ஏற்படுத்தும்.

இல்லத்தரசிகளைப் பொறுத்தவரை நிறைய சவால்கள் நிறைந்த காலகட்டமாக இருக்கும். ஆனால் உங்களின் தைரியத்தால் சவால்களைக் கடந்து நினைத்ததைச் செய்து முடிப்பீர்கள்.

உடல் ஆரோக்கியம் என்று கொண்டால் எச்சரிக்கை தேவை; வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

இரவு நேரப் பயணங்கள், வெளியூர்ப் பயணங்களை முடிந்தளவு தவிர்க்கவும். வீடு, மனை சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்யும்போது சட்டச் சிக்கல்கள் குறித்து நன்கு அலசி ஆராய்ந்து செயல்படுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews