கடகம் ஆனி மாத ராசி பலன் 2023!

கடக ராசி அன்பர்களே! ஆனி மாதத்தில் 12 ஆம் இடமான விரய ஸ்தானத்தில் சூர்ய பகவானும்- புதனும் இணைந்துள்ளனர். குழந்தைகள் ரீதியாக செலவுகள் ஏற்படும், மேலும் வீட்டில் சுப காரியங்கள் ரீதியாகவும் செலவுகள் ஏற்படும்.

பொருளாதாரம் ஏற்றம் நிறைந்ததாக இருந்தாலும், வரவுக்கு ஏற்ற செலவு கொண்டதாகவே இந்த மாதம் முழுமையும் இருக்கும். திருமண காரியங்களைப் பொறுத்தவரை இதுவரை தள்ளிப் போய் வந்தநிலையில் தற்போது அவை கைகூடும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

மேலும் சுக்கிரனும் செவ்வாய் பகவானும் இணைந்துள்ளதால் உடல் ஆரோக்கியம்ரீதியாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு பின் அவை சரியாகும். மாணவர்கள் கல்விரீதியாக மிகவும் ஆர்வமிகுதியுடன் காணப்படுவர். வீடு கட்டுதல், ஏற்கனவே இருக்கும் வீட்டினைப் புதுப்பித்தல் என்பது போன்ற காரியங்களைச் செய்வீர்கள்.

சுய தொழில் செய்வோர் தொழில் நிமித்தமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்; சக பணியாளர்களுடனான உறவில் கவனம் தேவை.

தொழில்ரீதியாக கூட்டாளர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும்; கவனத்துடன் செயல்படுதல் நல்லது.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews