சந்திரபாபுவின் கதை.. கிளைமாக்ஸ் எடுக்க மறுத்த பாரதிராஜா.. ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் அறியாத விவரங்கள்..!

கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான மிகச்சிறந்த படங்களில் ஒன்று ‘அந்த 7 நாட்கள்’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த படம் ஒரு வகையில் பார்த்தால் நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை கதை போன்றே தோன்றும். நடிகர் சந்திரபாபு, இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கிலோ இந்திய பெண் ஷீலா என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஹனிமூன் சென்று வந்த பிறகும் தனது மனைவி சோகமாக இருப்பதை பார்த்து அவரிடம் என்ன என்று கேட்டார். அப்போதுதான் அவர் ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒருவரை காதலித்ததாகவும் அவரையே திருமணம் செய்ய விரும்பியதாகவும் கூறியிருக்கிறார். இதனை அடுத்து தனது மனைவியை அவரது காதலரிடம் சேர்த்து வைத்ததாக கூறப்படுவது உண்டு.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

இந்த கதையை தான் கிட்டத்தட்ட ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் பாக்யராஜ் பயன்படுத்தினார். ராஜேஷ் மற்றும் அம்பிகா ஆகிய இருவருக்கும் திருமணம் நடக்கும் காட்சியோடு படம் தொடங்கும். முதலிரவில் அம்பிகா விஷத்தை குடிக்க முயற்சி செய்யும்போது அவரை காப்பாற்றி அவரிடம் என்ன என்று ராஜேஷ் விசாரிக்கும் போதுதான் அவர் ஏற்கனவே பாக்யராஜை காதலித்து இருப்பார் என்பது தெரியவரும்.

andha 7 naatkal1

இதனை அடுத்து பாக்யராஜை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைக்க முயற்சி செய்வதும் அதற்கு பாக்யராஜ் என்ன கூறினார் என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

இந்த படம் 1981ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் உருவான ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘தென்றல் அது உன்னிடத்தில்’, ‘எண்ணி இருந்தது’ ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பு பெற்றது.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

இந்த படத்தின் கிளைமாக்ஸில் ராஜேஷ் தனது மனைவியை பாக்யராஜிடம் ஒப்படைக்க முயற்சி செய்வார். அப்போது பாக்யராஜ் மறுத்து சில உதாரணங்களை கூறுவார். கடைசியில் அம்பிகா தாலியை கழட்டி எறிந்துவிட்டு வந்தால் தான் ஏற்றுக் கொள்வதாக கூறுவார். ஆனால் அம்பிகா தாலியை கழற்ற முடியாது என்று கூறுவார்.

நீங்கள்தான் 20ஆம் நூற்றாண்டு நபர் ஆயிற்றே, நீங்கள் அம்பிகாவின் கழுத்தில் உள்ள தாலியை அகற்றுங்கள் என்று ராஜேஷிடம் பாக்யராஜ் கூறுவார். ராஜேஷ், அம்பிகாவின் கழுத்தில் உள்ள தாலியை அறுக்க வரும் போது அம்பிகா அதற்கு மறுப்பு தெரிவிப்பார். இதுதான் நமது கலாச்சாரம், இதுதான் நமது பண்பு, என்னுடைய காதலி உங்களுடைய மனைவியாகலாம், ஆனால் உங்களுடைய மனைவி என்னுடைய காதலியாக என்றும் மாற முடியாது என்ற அற்புதமான வசனத்துடன் படத்தை முடித்து இருப்பார்.

andha 7 naatkal

இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை தன்னால் சிறப்பாக எடுக்க முடியுமா என்ற சந்தேகம் பாக்யராஜுக்கு வந்தது. இதனை அடுத்து அவர் தனது குருநாதர் பாரதிராஜாவிடம் சென்று கிளைமாக்ஸை மட்டும் எடுத்து தாருங்கள் என்று கூறினார். ஆனால் படம் இவ்வளவு நன்றாக வந்திருக்கிறது, திரைக்கதையும் சூப்பராக இருக்கிறது. நான் கிளைமாக்ஸ் மட்டும் எடுத்துக் கொடுத்தால் என்னால்தான் இந்த படம் ஓடியது என்று கூறுவார்கள். எனவே, உன்னால் கண்டிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸை நன்றாக எடுக்க முடியும், முயற்சி செய், நீ வெற்றி பெறுவாய் என்று வாழ்த்து தெரிவித்தார்.

எம்ஜிஆர் – ஜெயலலிதா நடிக்க இருந்த படம்.. திடீரென ரஜினி – அம்பிகா நடிக்கும் படமாக மாறியது எப்படி?

அதன் பிறகுதான் தன்னம்பிக்கையுடன் பாக்யராஜ் இந்த கிளைமாக்ஸ் காட்சியை எடுத்ததாக கூறப்படுவதுண்டு. பாக்யராஜின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று ‘அந்த 7 நாட்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...