ஜியோ அறிமுகம் செய்துள்ள புளூடூத் டிராக்கர்.. சலுகை விலையில் வாங்க அரிய வாய்ப்பு..!

இந்தியாவின் முன்னணி தனியார் தொலை தொடர்பு நிறுவனமான ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட ஜியோ விஆர் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியது என்பதும் அது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ஜியோ நிறுவனம் புதியதாக புளூடூத் ட்ராக்கர் என்ற ஒரு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புளூடூத் டிராக்கரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

இந்தியாவில் ஜியோ அறிமுகம் செய்துள்ள புளூடூத் டிராக்கரின் விலை ரூ.2,499 மட்டுமே, ஆனால் தற்போது தள்ளுபடி விலையில் ரூ.749க்கு கிடைக்கிறது. ஜியோ டேக் என்ற இந்த சாதனமானது உங்களிடம் இருக்கும் சாவி, பர்ஸ் போன்ற நீங்கள் வைத்திருக்கும் உடமைகளுடன் இணைக்கக்கூடிய ஒரு சிறிய வட்ட வடிவ சாதனமாக அமைந்துள்ளது. இது புளூடூத் 5.1 அம்சத்தை பெற்றுள்ளது மற்றும் 20 மீட்டர் உட்புறம் மற்றும் 50 மீட்டர் வெளியில் வரக்கூடியது. இதில் உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கரும் இருப்பதால், உங்கள் போனுக்கும் பயன்படுத்தலாம்.

ஜியோ டிராக்கரின் சில முக்கிய அம்சங்கள் இதோ:

* புளூடூத் 5.1 இணைப்பு
* உட்புறத்தில் 20 மீட்டர் மற்றும் வெளியில் 50 மீட்டர் வரை வரம்பு
* உங்கள் தொலைபேசியை ஒலிக்க உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்
* மாற்றக்கூடிய CR2032 பேட்டரி
* 1 வருடம் வரை பேட்டரி ஆயுள்

ஜியோ டிராக்கர் ஆனது ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுடனும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது App Store இலிருந்து ioThingsபயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டும். நீங்கள் பயன்பாட்டை நிறுவியதும், நீங்கள் ஒரு கணக்கை உருவாக்கி உங்கள் சாதனத்துடன் உங்கள் ஜியோ டிராக்கரை இணைக்கலாம்.

ஜியோ டிராக்கர் புளூடூத்தின் சில நிறைகள் மற்றும் குறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

நிறைகள்:

* விலை மலிவு
* சிறிய மற்றும் இலகுரக சாதனம்
* பயன்படுத்த எளிதானது
* ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்கள் இரண்டிற்கும் இணக்கமானது
* நீண்ட பேட்டரி ஆயுள்

குறைகள்

* வீட்டிற்குள் வரம்பு குறைவாக உள்ளது
* ஜிபிஎஸ் கண்காணிப்பு இல்லை
* வாட்டர் ரெசிஸ்டெண்ட் இல்லை

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews