ரஜினிக்காக ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் லோகேஷ்! தரமான சம்பவம் தான்!

தமிழ் சினிமாவில் ஐந்து திரைப்படங்கள் மட்டுமே இயக்கி உலக சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவரின் முதல் திரைப்படம் மாநகரம். அதைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் கைதி, விஜய் நடிப்பில் மாஸ்டர்,உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம், தற்பொழுது மீண்டும் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி கோடிக்கணக்கில் வசூலை அள்ளிக் குவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாகவே இயக்குனர் லோகேஷ் அவர்கள் லியோ திரைப்படம் ஒரு ரீமேக் திரைப்படம் என்ற தகவலை முன்னதாக கூறியிருந்தார். அது ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்ற ஆங்கில திரைப்படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்த தகவல்.

அடுத்தடுத்து ரீமேக் படங்களை இயக்கி ஹிட் கொடுத்து வரும் லோகேஷ் அடுத்ததாக ரஜினியுடன்
இணைந்து தலைவர் 171 வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த ஆவல் தற்பொழுது ரசிகர்கள் மனதில் என தொடங்கியுள்ளது.

தற்போது தலைவர் 171வது திரைப்படமும் ரீமேக் திரைப்படமாக அமைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. லோகேஷ் இயக்கம் தலைவரின் 171வது திரைப்படம் ஹாலிவுட் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசியின் ஒரு திரைப்படத்தை தான் லோகேஷ் ரீமேக் செய்ய உள்ளதாக தற்பொழுது மாஸ் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசி ஹாலிவுட் சினிமாவின் பிதாமகன் என்றே அழைக்கப்படுகிறார். அந்த அளவிற்கு அவர் தொடாத கதையும் இல்லை, வெற்றி பெறாத திரைப்படங்களும் இல்லை என்று கூறும் அளவிற்கு அவரின் ஒவ்வொரு திரைப்படங்களும் வெற்றியின் உச்சத்தை பெற்றுள்ளது. தற்போது இந்த இயக்குனர் தன்னுடைய 80வது வயதிலும் மிகச் சிறந்த ஒரு கேங்ஸ்டர் கதையை இயக்கி வெற்றி பெறச் செய்துள்ளார்.

லியோ படத்தின் மூலம் மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! நஷ்ட ஈடு மட்டும் இத்தனை கோடியா?

இந்தத் திரைப்படத்தின் பெயர் தி ஐரிஷ் மேன். இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு நெட் பிளக்சில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தை தான் லோகேஷ் அவர்கள் ரஜினிக்காக தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் இரண்டு ஹீரோக்கள் இடம் பெற்றிருந்த நிலையில் அதில் எந்த ஹீரோ கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க உள்ளார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உள்ளது. லோகேஷ் அவர்கள் தனது திரையுலக ஆசானாக பார்க்கும் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசி அவர்களின் திரைப்படத்தை ரீமேக் செய்து படமாக்க உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...