இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட்போன்: என்ன விலை?

இந்தியாவில் விரைவில் iQoo Neo 7 Pro 5G என்ற ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் நிலையில் இந்த போனின் சிறப்பம்சங்கள், விலை குறித்த தகவல்களை தற்போது பார்ப்பொம்.

iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 SoC உடன் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tipster Paras Guglani என்பவர் ஒரு ட்வீட்டில் iQoo Neo 7 Pro 5G இந்தியாவில் ஜூன் 20 ஆம் தேதி அறிமுகமாகும் என்றும், 16 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடங்கிய ஸ்ட்ரோரேஜ் உடன் கருப்பு வண்ணத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக பகிர்ந்துள்ளார். மேலும் இந்த போனின் விலை ரூ. 38,000 முதல் ரூ. நாட்டில் 42,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

iQoo Neo 7 Pro 5G ஆனது 6.78 இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே, 144Hz ரெசலூசன் மற்றும் LPDDR5 ரேம் மற்றும் UFS 3.1 இன்பில்ட் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 SoC அம்சங்களுடன் வெளியாக உள்ளது.

iQoo Neo 7 Pro 5G ஸ்மார்ட்போனின் பின்புரம் மூன்று கேமரா உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50 மெகாபிக்சல் முதன்மை Samsung ISOCELL GN5 சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்களை உள்ளடக்கும் கேமிராக்கள் இருக்கும் என்றும், 16 மெகாபிக்சல் செல்பி கேமிரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

iQoo Neo 7 Pro 5G ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம், 5,000mAh பேட்டரி மற்றும் Wi-Fi 6, ப்ளூடூத் v5.3 இணைப்பு மற்றும் USB 2.0 Type-C போர்ட்டுடன் வர வாய்ப்புள்ளது. இந்த போன் 190 முதல் 195 கிராம் வரை எடையும் 8.53 மிமீ அல்லது 8.36 மிமீ தடிமன் இருக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews