கேமிராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஐபோன் 15.. வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்ப்பு..!

ஆப்பிள் ஐபோன் ஒவ்வொரு வருடமும் புதிய மாடலை வெளியிட்டு வரும் நிலையில் ஐபோன் 15 என்ற மாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் ஐபோன் 15 மாடலில் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் எனவே புகைப்படம் மற்றும் வீடியோ பிரியர்களுக்கு இந்த ஐபோன் வேற லெவலில் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு வெளியாகும் ஐபோன் 15 என்பது, 4 மாடல்களை கொண்டதாக இருக்கும் என்றும் அதில் 48 மெகா பிக்சல் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஐபோன் மாடல்களில் 12 மெகாபிக்சல் கேமராக்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

48 மெகாபிக்சல் கேமராக்களுடன் ஐபோன் வெளியாகும் என்பது சோனி போன்ற கேமராக்களை வைத்து செயல்படும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன்15 சீரியஸ் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 48 மெகாபிக்சல் கேமராவை கொண்டிருப்பதால் இந்த ஐபோனின் நிறைகள், குறைகள் என்னென்னவாக இருக்கும் என்பதை பார்ப்போம்.

நிறைகள்:

* 48-மெகாபிக்சல் கேமராவில் உள்ள பெரிய சென்சார் அதிக ஒளியைப் பிடிக்க முடியும், மேலும் குறைந்த ஒளி நிலைகளில் கூட சிறந்த புகைப்படங்களுக்கு வழிவகுக்கும்.

* 48-மெகாபிக்சல் கேமராவைப் பயன்படுத்தி அதிக தெளிவுத்திறன் கொண்ட ஜூம் செய்து படம் பிடிக்கலாம்

* 48 மெகாபிக்சல் கேமராவின் கூடுதல் தெளிவுத்திறனைப் பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான புகைப்படங்களை உருவாக்கலாம்.

குறைகள்

* 48 மெகாபிக்சல் கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரிய கோப்புகளாக இருக்கும், அவை அதிக சேமிப்பிடத்தை கைப்பற்றும்.

* கேமராவால் போதுமான வெளிச்சத்தைப் பிடிக்க முடியவில்லை என்றால், படத்தின் தரம் பாதிக்கப்படலாம்.

* 48 மெகாபிக்சல் கேமராக்கள் பொதுவாக 12 மெகாபிக்சல் கேமராக்களை விட பல மடங்கு விலை அதிகம் இருக்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews