ஒரு வருடத்திற்கு முன் தண்ணீரில் முழ்கிய ஐபோன் 12 வேலைசெய்யும் அதிசயம்..!

ஒரு ஐபோன் 12 மாடல் ஒரு வருடத்திற்கு தண்ணீரில் மூழ்கிய நிலையில் அந்த ஐபோன் தற்போது வேலை செய்யும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் ஐபோன் 12 ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். கிட்டத்தட்ட ஒரு வருடம் நீருக்கடியில் இருந்த அந்த ஐபோன் இன்னும் வேலை செய்வதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக கூறினார்.

ஐபோன் 12 ஆனது IP68 வாட்டர்ஃப்ரூப் மற்றும் தூசியில் இருந்து பாதுகாக்கும் அம்சத்தை கொண்டுள்ளது. ஆனால் 30 நிமிடங்களுக்கு 6 மீட்டர் வரை நீரில் மூழ்கினால் மட்டுமே ஐபோன் பாதுகாப்புடன் இருக்கும். இருப்பினும், ஐபோன் 12 வாட்டர் புரூப் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. தொலைபேசி தண்ணீரில் விழுந்தால் காலப்போக்கில் சிதைவடையும் சாத்தியம் உள்ளது என்றும் கூறப்பட்டது.

ஆனால் ஐபோன் 12 ஐப் பொறுத்தவரை, வெள்ளத்தில் மூழ்கிய அடித்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதை சுற்றி குப்பைகள், தண்ணீர் இருந்து போதிலும் அது பாதிக்கப்படாமல் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபோன் 12 ஒரு வருடத்திற்கு நீரில் மூழ்கி வேலை செய்கிறது என்பது சாத்தியம் என்றாலும், அது எல்லா ஐபோன்களுக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. தற்செயலாக உங்கள் ஐபோன் தண்ணீரில் விழுந்தால், அதை விரைவில் உலர வைக்க வேண்டியது அவசியம். கூல் அமைப்பில் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தலாம் அல்லது போனை அரிசிப் பையில் வைக்கலாம். உங்கள் ஐபோனை எவ்வாறு உலர்த்துவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அதை ஒரு நிபுணரிடம் உதவிக்கு எடுத்துச் செல்லலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews