தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள் தற்போது மாநில எல்லையைக் கடந்து தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உதயநிதி கைது என்ற அந்த ஒற்றைக் கைது நடவடிக்கை, வட இந்திய ஊடகங்கள் மற்றும் தேசிய அளவிலான விவாதங்களில் விஜய்யை ஒரு மாபெரும் அரசியல் ஹீரோவாகச் சித்தரித்துள்ளது. டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த முன்னணி செய்தி நிறுவனங்கள் அனைத்தும் விடிய விடிய விஜய்யின் ஆட்சி நிர்வாகம், அவரின் துணிச்சலான முடிவுகள் மற்றும் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில் அவர் காட்டும் தீவிரத்தைப் பற்றியே முதன்மைச் செய்திகளாக ஒளிபரப்பி வருகின்றன. ஒரு மாநிலக் கட்சியாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை , தேசிய ஊடகங்கள் ஒரே இரவில் ஒரு தேசியக் கட்சிக்கு நிகரான அங்கீகாரத்தை வழங்கி வருகின்றனவோ என்ற எண்ணம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தேசிய ஊடகங்களின் இந்த திடீர் கவனம் ததேச்சையாக நடந்தது அல்ல; அதற்குப் பின்னால் தவெகவின் மிகத் துல்லியமான மூலோபாயத் திட்டமிடல் இயங்கி வருகிறது. குறிப்பாக, தவெகவின் டிஜிட்டல் படைகளான ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ தற்போது வட இந்திய சமூக வலைதளப் பக்கங்களில் இந்திய மொழியிலேயே புகுந்து விளையாடி வருகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சியினரும், முக்கியமாக திமுகவினரும் மேடைகளிலும் பொதுவெளியிலும் பேசிய சர்ச்சைக்குரிய மற்றும் ஆபாசமான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களைத் துல்லியமாகச் சேகரித்து, அவற்றுக்கு இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு மற்றும் சப்டைட்டில்களை இணைத்து வட இந்தியா முழுவதும் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த மொழிபெயர்க்கப்பட்ட வீடியோக்கள் வட இந்தியப் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும், அங்கு விஜய் முன்னெடுக்கும் தூய்மை அரசியல் குறித்தும் ஒரு நேர்மறையான பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. “இதுவரை தேசிய அளவில் கட்டமைக்கப்பட்ட திராவிட மாதிரியின் உண்மையான முகம் இதுதானா?” என்ற கேள்வியை வட இந்திய மாநிலங்களில் இயல்பாகவே எழச் செய்வதில் இந்த விர்ச்சுவல் வாரியர்ஸ் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம், தமிழக எல்லையைத் தாண்டி வட இந்திய மக்களாலும் கவனிக்கப்படும் ஒரு முக்கியத் தலைவராக முதலமைச்சர் விஜய் குறுகிய காலத்தில் உருவெடுத்துள்ளார்.
இந்த வியூகங்கள் அனைத்தும் ஏதோ தற்செயலாக நடப்பது போலத் தெரிந்தாலும், இதன் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் திட்டம் ஒளிந்திருப்பதாக அரசியல் கணக்காளர்கள் கணித்து வருகிறார்கள். வெறும் மாநில அளவிலான ஆட்சியை மட்டும் குறிவைக்காமல், தேசிய அரசியலிலும் தவெகவை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றுவதற்கான ‘மெகா பிளான்’ இதன் பின்னால் இயங்குகிறது. டெல்லி அரசியலை உற்றுநோக்கும் அரவிந்த் கெஜரிவால் போன்ற மாற்றத்தை விரும்பும் தலைவர்கள் மற்றும் பிரசாந்த் கிஷோர் போன்ற வியூகவாதிகளின் பார்வையில், விஜய்யின் இந்தத் தேசிய எழுச்சி ஒரு புதிய அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்தத் திடீர் அரசியல் மாற்றமும் தவெகவின் தேசியப் பரிமாணமும் ஆளுங்கட்சியான பாஜகவிற்கு ஒரு பெரிய எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்பட வேண்டும். வட இந்தியாவில் தங்களுக்கு மட்டுமே இருந்த “ஊழலற்ற, துணிச்சலான தலைவர்” என்ற பிம்பத்திற்குப் போட்டியாக, தெற்கிலிருந்து விஜய் எனும் புதிய சக்தி தேசிய ஊடகங்களின் ஆதரவோடு உருவெடுத்து வருவதை பாஜக சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. வட மாநிலங்களில் விஜய்க்கு உருவாகி வரும் இந்த ஆதரவு அலை, எதிர்காலத்தில் தேசிய அளவிலான கூட்டணி உருவாக்கங்களிலும், நாடாளுமன்ற அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே, தவெகவின் இந்த அதிரடி நகர்வுகளை பாஜகவும் மற்ற தேசியக் கட்சிகளும் மிகவும் சுதாரிப்பாகக் கவனித்து நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஊடகங்களை ஈர்க்கும் விஜய்யின் மாஸ் ஆளுமை, சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்கும் அவரது விர்ச்சுவல் படையின் துல்லியம், மற்றும் சட்டப்பூர்வமான அதிரடி நடவடிக்கைகள் ஆகியவை இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு மாநிலக் கட்சியிலிருந்து தேசிய அளவிலான மாபெரும் மாற்றத்தின் முகமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. வரும் நாட்களில் இந்த தேசியப் பிரபலம் தமிழக அரசியலிலும், வரவிருக்கும் தேர்தல்களிலும் எத்தகைய மாற்றங்களை உருவாக்கப் போகிறது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
