ஆகஸ்ட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.. செப்டம்பரில் வேலை ஆரம்பம்.. இதுதான் தவெக அரசின் ஸ்பீடு.. 2021ல் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல் மாதிரி இருக்குது.. ஆனால் போன மாதம் போட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வரப்போகுது.. இதுதான் திராவிட மாடல் ஆட்சிக்கும் மக்கள் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசம்.. ரூ.1,651 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீடு.. 4000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு.. இப்படி ஒரு அரசு கிடைக்க தமிழக மக்கள் கொடுத்து வச்சிருக்கனும்..
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதில் மாநில அரசு காட்டி வரும் வேகம் பன்னாட்டு நிறுவனங்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், ஜிப்பர் மற்றும் ஆடை அசெசரிஸ் தயாரிப்பில் உலகளவில் முன்னணி வகிக்கும் ஜப்பானைச் சேர்ந்த YKK நிறுவனம், தனது பிரம்மாண்டமான புதிய உற்பத்தி மையத்தை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான பணிகளை அதிரடியாக தொடங்கியுள்ளது. தொழில் துறைக்கான புரிந்தணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான மிகக்குறுகிய காலத்திலேயே, களத்தில் பணிகள் வேகமெடுத்துள்ளது மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத் திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தான் தமிழ்நாடு அரசுக்கும் YKK நிறுவனத்திற்கும் இடையே தொழில்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த மாதத்திலேயே, அதாவது செப்டம்பர் மாதத்திலேயே இதற்கான கட்டுமான மற்றும் ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கப்பட்டுள்ளன. வழக்கமாக இதுபோன்ற பெரிய திட்டங்களுக்கு ஒப்புதல்கள் பெறவும் பணிகள் தொடங்கவும் பல மாதங்கள் ஆகும் நிலையில், இவ்வளவு விரைவாகப் பணிகள் தொடங்கியிருப்பது உலகளாவிய முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மஹிந்திரா ஆரிஜின்ஸ் தொழில் பூங்காவில் தான் இந்த புதிய உற்பத்தி வசதி அமையவுள்ளது. சுமார் ரூ.1,651 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் உருவாகும் இந்த உற்பத்தி மையம், தமிழ்நாட்டின் ஆடை மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தித் துறைக்கு ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த தொழிற்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரம்மாண்ட திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4,300-க்கும் மேற்பட்ட உள்ளூர் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கவுள்ளன. குறிப்பாக, உற்பத்தித் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளும், தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பான வாய்ப்புகளும் இதன் மூலம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பக்கபலமாக அமையும்.
முதலீட்டாளர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளையும் புரிந்தணர்வு ஒப்பந்தங்களையும் வெறும் காகித அளவோடு நிறுத்திவிடாமல், அவற்றை அதிவேகத்தில் நடைமுறை யதார்த்தமாக மாற்றுவதில் முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான அரசும், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அரசு இயந்திரத்தின் இந்த வேகமான நடவடிக்கைகளும் வெளிப்படையான தொழில் சூழலுமே, பன்னாட்டுப் பெரும் நிறுவனங்கள் தங்களின் முதலீட்டுக்கான முதல் முகவரியாகத் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முதன்மையான காரணமாக விளங்குகின்றன.
ஒட்டுமொத்தத்தில், YKK போன்ற உலகளாவிய ஜப்பானிய நிறுவனத்தின் இந்த விரைவான விரிவாக்கம், தமிழ்நாட்டின் தொழில் வளம் மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதிலும், கொடுத்த வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றுவதிலும் தமிழ்நாடு இப்போதும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வு மற்றொரு சிறந்த சான்றாகும்.





