ஐவகை கடன்களிலிருந்து விடுபடனுமா?! அப்ப இதை செய்ங்க

அப்படியா! நான் யார்கிட்டயும் இதுவரை கைநீட்டி கடன் வாங்கினதில்லை. பேங்க்லகூட நான் லோன் வாங்கினது இல்லை என சிலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனா
மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன்கள் இருக்கு கை நீட்டி பொருளாய் வாங்கினால்தான் கடன் என அர்த்தமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஐவகை கடன்கள் இருக்கின்றது. அந்த ஐவகை கடன்கள் எவை என பார்ப்போமா?!

முதல் கடன் தேவர்களுக்கானது…

நாம் சுவாசிப்பதற்கு காற்று, பார்ப்பதற்கு வெளிச்சம், பருகுவதற்கு நீர் என நமது எல்லாத் தேவைகளையும் தேவர்கள் நமக்கு வழங்குகின்றனர். நமது உடலின் ஒவ்வோர் அங்கமும் அசைவும் பல்வேறு தேவர்களால் கட்டுப்படுத்தப்படுவதால், நாம் முப்பத்து மூன்று முக்கோடி தேவர்களுக்கும் கடன்பட்டுள்ளோம். தேவர்களின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு யாகங்கள் புரிய வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.


இரண்டாவது கடன் ரிஷிகளுக்கானது. வியாசதேவர், பராசரர், நாரதர், அகத்தியர், சப்தரிஷிகள் போன்ற மகரிஷிகள் நமக்கு தர்ம சாஸ்திரம், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் போன்ற வேத சாஸ்திரங்களை வழங்கி உள்ளனர். வேத சாஸ்திரங்களைப் படிப்பதன் மூலம் ரிஷிகள் திருப்தி அடைகின்றனர். அவற்றை படித்து அதன்படி நடப்பதே அவருக்கான நன்றிக்கடன் செலுத்துவதாகும்..


மூன்றாவது கடன் பித்ருக்களுனது… நாம் பிறப்பெடுத்து அக்குடும்பத்தில் இணைந்த காரணத்தினால் அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம். அவர்களுக்கு சிரார்த்த சடங்கு சரிவர செய்வதாலும் சந்ததியர்களை வாழையடி வாழையாகத் தழைக்க வைப்பதாலும் மூதாதையர்கள் திருப்தி அடைகின்றனர். இதனை பித்ரு யாகம் என அழைப்பர். பித்ரு லோகத்தில் மூதாதையர்கள் இன்பமாக வாழ்வதற்கு இதுவே உதவுகிறது. சிரார்த்த சடங்கு செய்யாத பட்சத்தில் மூதாதையர்களின் சாபத்தினால் குடும்ப விருத்தி தடைபடுகிறது.

நான்காவது கடன்சக மனிதர்களுக்கான கடன். தாய் தந்தை சகோதரர் சகோதரி சேவகன், கணவன், மனைவி, குழந்தைகள் என பலரிடமிருந்து நாம் சேவையை ஏற்பதால், அவர்கள் அனைவருக்கும் கடன்பட்டுள்ளோம். அததேமயம் விருந்தினர்களைக் உபசரித்து, மற்றவர்களையும் அந்த சேவையில் ஈடுபடுத்தும்போது விருந்தினர்கள் திருப்தி அடைகின்றனர். இதனை நிர் யாகம் என அழைப்பர். எதிரியே இல்லத்திற்கு விருந்தினராக வந்தாலும், அவருக்கு விருந்து படைப்பது நமது பண்பாடு.


ஐந்தாவது கடன் மற்ற உயிர்களுக்கு… எடுத்துக்காட்டாக, பால் கொடுக்க்கும் பசுக்கள், உழவுக்கு கைக்கொடுக்கும் காளை, மண்புழு, ஈ, காக்கை, எறும்பு என அனைத்து உயிர்களும் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு உதவி புரிகிறது . அவைகளுக்கும் நாம் கடன் பட்டுள்ளோம்.


இப்ப ஒத்துக்கொள்கிறீர்களா?! நாம் அனைவரும் கடனாளிகள் என?! சரி, இந்த கடன்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என இனி பார்க்கலாம்..இந்த ஐந்து கடன்களையும் எந்த ஜென்மத்திலும் யாராலும் முழுமையாக அடைக்க முடியாது. அவ்வாறு கடனை அடைப்பதற்கு முயற்சி செய்யும்போதே, மேலும் பலரின் சேவையை ஏற்று, மேலும் மேலும் கடனாளியாக ஆகிக்கொண்டேதான் இருக்கின்றோம். அதனால், இந்த கடனிலிருந்து முற்றிலுமாய் மீள, முழுமையாக கிருஷ்ணரின் திருப்பாதத்தில் தஞ்சம் புக வேண்டும். யார் ஒருவர் கிருஷ்ணரின் பாதத்தில் தஞ்சம் அடைகின்றார்களோ, அவர்கள் தேவர்களுக்கோ ரிஷிகளுக்கோ பித்ருக்களுக்கோ மனிதர்களுக்கோ மற்ற உயிர்வாழிகளுக்கோ கடன்பட்டவர்கள் அல்லர்.கிருஷ்ணரைச் சார்ந்து வாழ்வதால் அனைத்து கடனிலிருந்தும் முழுமையாக விடுபட முடியும். கிருஷ்ணரே அனைத்து ஜீவன்களுக்கும் தந்தையாகத் திகழ்கிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரோ என்னிடம் சரணடைந்தால், அனைத்து விதமான கடன்களிலிருந்தும் விடுவிப்பேன் என உத்தரவாதம் அளிக்கிறார்.

ஹரே கிருஷ்ண!!ஹரே கிருஷ்ண!!
கிருஷ்ண!! கிருஷ்ண!! ஹரே ஹரே!!

என்னும் மந்திரத்தை தினமும் உச்சரித்து, கிருஷ்ணருக்கு பக்தி செய்தால், அனைத்து கடனிலிருந்தும் படிப்படியாக விடுபட்டு, நிம்மதிக்கும் மேலான ஆனந்தத்தை அடைய முடியும்.

Published by
Staff

Recent Posts