இரவு முழுவதும் ஏசி ஓடணும், ஆனா கரண்ட் பில் கம்மியா வரணும்.. இந்த டெக்னிக்கை கடைபிடியுங்கள்..!

ஏசி என்பது ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருளாக இருந்த நிலையில் தற்போது அது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. சென்னை போன்ற கடும் வெயில் அடிக்கும் இடங்களில் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்பதும் வீட்டை சுற்றி வானுயர்ந்த கட்டிடங்கள் இருப்பதால் வெளிக்காற்று வீட்டுக்குள் வராததால் ஏசி அத்தியாவசியமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் கோடை காலத்தில் இரவு முழுவதும் ஏசி ஓடினாலும் குறைந்த மின் கட்டணத்தை செலுத்தும் வகையில் டெக்னிக்கை கடைபிடிக்கலாம். முதலாவது பெரும்பாலானோர் குளிர்காலத்தில் ஏசியை உபயோகப்படுத்தாமல் கோடை காலத்தில் மட்டுமே உபயோகப்படுத்துகின்றனர். அதனால் மாத கணக்கில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஏசியில் தூசு அடைந்திருப்பதால் கோடைகாலத்தில் ஏசியை பயன்படுத்தும் போது அதிக சிரமம் ஏற்படுகிறது. எனவே கோடை காலத்திற்கு முன்பே ஏசியை ஒருதடவை சர்வீஸ் செய்து விட்டால் கரண்ட் பில் குறைவாக வரும்.

மேலும் ஏசி வைத்திருப்பவர்கள் செய்யும் பெரும்பாலான தவறு ஏசியை ஆன் செய்தவுடன் 18ல் வைப்பது தான். மனித உடலுக்கு 24 டிகிரி செல்சியஸ் தான் உகந்தது என்று ஆய்வாளர்கள் கூறி இருக்கும் நிலையில் 18 டிகிரி வைத்திருப்பது மிகப்பெரிய தவறு. எனவே 24 டிகிரியில் ஏசியை வைத்தால் படிப்படியாக அறை குளிர்ச்சி அடைவதோடு உடலுக்கும் பாதிப்பு ஏற்படாது, அது மட்டும் இன்றி மின்கட்டணமும் குறையும்.

அடுத்ததாக ஏசியை ஆன் செய்யும் முன் கதவு ஜன்னல் ஆகியவற்றை கண்டிப்பாக மூடி விட வேண்டும். கதவை மூடிவிட்டால் ஏசி அதிகமாக வேலை செய்வது குறையும் என்பது மட்டுமின்றி மின் கட்டணமும் குறையும்.

அடுத்ததாக ஏசி வாங்கும் போதே நல்ல தரமான ஏசிகளை வாங்க வேண்டும். குறிப்பாக அதிக ரேட்டிங் உள்ள ஏசிகளை தேர்வு செய்தால் மின்சார பில்லை குறைக்கலாம்.

மேலும் ஏசி போடும்போது மின்விசிறியை மெதுவான ஸ்பீடில் சுழல வைத்தால் ஏசி காற்று அறையின் மூலை முடிக்கிலும் செல்லும் என்பதும் அறை முழுவதும் குளிர்ச்சி இருப்பதோடு மின் கட்டணமும் குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...