கூகுள் மேப்பில் மேலும் 3 வசதிகள்.. இனி வேற லெவலில் இருக்கும்..!

கூகுள் மேப் என்பது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு அம்சம் என்பதன் இதன் மூலம் தெரியாத ஊருக்கு கூட இந்த மேப் மூலம் மிக எளிதில் யாரிடமும் வழி கேட்காமல் சென்றுவிடலாம் என்பது தெரிந்ததே.

மேலும் பெரும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூகுள் மேப்ஸ் அவ்வப்போது தங்களது பயனாளர்களுக்கு புதிய வசதிகளை அளித்து வரும் நிலையில் தற்போது மேலும் மூன்று வசதிகளை அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அந்த வசதிகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1. பார்க்கக்கூடிய திசைகள்: இந்தப் புதிய அம்சம் மூலம் திசைகளை வெகு எளிதில் புரிந்து கொள்ளலாம். நீங்கள் பயணத்தில் இருக்கும்போது, உங்கள் திசையை, வழியை சரிபார்க்க இந்த வசதி உதவும். இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது. இந்த வசதியை பயன்படுத்த, Maps செயலியை ஓப்பன் செய்து நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை குறிப்பிட்டால் நீங்கள் எந்த திசையில் செல்கிறீர்கள் என்பதை பார்க்கலாம்.

2. சமீபத்திய பகுதி: கூகுள் மேப்பில் உள்ள இந்த புதிய வசதியில் நீங்கள் சமீபத்தில் சென்ற இடங்களையும் பார்க்கலாம். நீங்கள் முன்பு சென்ற இடங்களைக் கண்டறிய அல்லது எதிர்கால பயணத்தைத் திட்டமிட இது ஒரு சிறந்த வழியாகும். இந்த வசதியும் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் கிடைக்கிறது. இந்த வசதியை பெற கூகுள் மேப்பை ஓப்பன் செய்து திரையின் மேல் இடது மூலையில் உள்ள மூன்று வரிகளை க்ளிக் செய்யவும். பின்னர், “சமீபத்தியவை” என்பதை கிளிக் செய்தால், நீங்கள் சமீபத்தில் சென்ற அனைத்து இடங்களின் பட்டியலை காணலாம்.

3. அதிவேகக் காட்சி: இந்தப் புதிய அம்சம், நீங்கள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு முன், அந்த இடத்தை ஆராய உதவுகிறது. நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை முழுமையாக 360 டிகிரி இமேஜரி மற்றும் AI ஐப் பயன்படுத்தி பார்க்கலாம். உங்கள் பயணத்தை திட்டமிடும் முன் அந்த இடம் குறித்த முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள இது ஒரு சிறந்த வழியாகும். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்த, Maps ஆப்ஸைத் திறந்து நீங்கள் விரும்பும் இடத்தை தேடி, அதை கண்டறிந்ததும், “இம்மர்சிவ் வியூ” என்பதை கிளிக் செய்யவும், அந்த இடத்தில் உள்ள வணிகங்கள், முக்கிய இடங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், உணவகங்கள், தங்குமிடம் போன்ற தகவல்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews