பேர்ட் உள்பட எந்த AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த கூடாது: ஊழியர்களுக்கு கூகுள் உத்தரவு..!

கூகுள் பேர்ட் உள்பட எந்த விதமான AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தக்கூடாது என கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரகசிய தரவுகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ள கூகுள் நிறுவனம் இந்த தடையை விதித்துள்ளதாக தெரிகிறது. கூகுள் பேர்ட் உள்பட AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது டேட்டாக்கள் பரிமாறப்படுகின்றன என்றும் அதனால் முக்கிய தகவல்களை AI தொழில்நுட்பம் சேமித்து வைத்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதால் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இந்த கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

AI தொழில்நுட்பத்தின் அபாரமான வளர்ச்சி பல அபாயங்களை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக டேட்டாக்களை AI தொழில்நுட்பம் சேமித்து வைத்துக் கொள்ளும் நிலையில் அது மிகப்பெரிய ஆபத்தாக மாறும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே சாம்சங் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு AI தொழில்நுட்பத்தை அதன் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் நிறுவனம் இந்த தடை செய்ததற்கான சில காரணங்களை தற்போது பார்ப்போம்.

AI தொழில்நுட்பம் சில முக்கியமான தகவல்களை சேமித்து வைக்கலாம். அதனால் தொழில்நுட்ப ரகசியங்கள் பாதுகாக்க முடியாத நிலை ஏற்படும்.

* தீங்கிழைக்கும் குறியீட்டை உருவாக்க சாட்போட்களைப் பயன்படுத்தலாம்.

* தவறான தகவல்களை பரப்புவதற்கு சாட்போட்கள் பயன்படுத்தப்படலாம்.

ஏற்கனவே ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை தடை செய்துள்ள நிலையில் தற்போது உலகின் நம்பர் ஒன் தேடுதள நிறுவனமான கூகுளும் அதே நடவடிக்கையை எடுத்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews