ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை.. அடுத்தடுத்த நாட்களில் இனி என்ன ஆகும்?

தங்கம் விலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 5400 இருந்து 5500 வரை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கம் விலை ஒரு சில வாரங்களில் 6000 என்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில மாதங்களாக எந்த விதமான ஏற்றமும் இறக்கமும் பெரிய அளவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய பங்குச் சந்தை உள்பட உலகம் முழுவதும் பங்குச்சந்தை தற்போது ஏற்றத்தில் உள்ளதை அடுத்து பங்கு சந்தையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்து வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் திருமணம் சீசன் முடிந்து விட்டதால் தங்கத்தின் தேவையும் குறைந்திருப்பதாகவும் இனி இரண்டு மாதங்கள் கழித்து தங்கத்தின் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் தங்கத்தின் விலை அதிகமாக இறங்கவும் வாய்ப்பு இல்லை என்றும் 100 ரூபாய் ஏற்ற இறக்கத்துடன் தான் இன்னும் சில நாட்கள் அல்லது வாரங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தங்கத்தை பொறுத்தவரை நீண்ட கால அடிப்படையில் அதாவது ஐந்து முதல் பத்து வருட முதலீடு செய்யலாம் என்ற எண்ணம் உள்ளவர்கள் தாராளமாக எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை வாங்கலாம் என்று தான் முதலீட்டு ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது

எனவே தங்கம் எப்போதெல்லாம் குறைந்திருக்கிறதோ அதை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பு என்று அதை பயன்படுத்தி தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளவும் என்றும் தங்கம் உதவுவது போல் வேறு எந்த முதலீடும் உதவாது என்று தான் கூறப்படுகிறது

எப்போது வேண்டுமானாலும் தங்கத்தை அவசரத்துக்கு அடகு வைத்துக் கொள்ளலாம் அல்லது விற்று பணமாக வைத்துக் கொள்ளலாம் என்றும் வேறு எந்த முதலிடம் உடனடியாக வெளியே வர முடியாத வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே தங்கம் ஏறும் அல்லது இறங்கும் என்ற எதிர்பார்ப்பு இன்றி அவ்வப்போது பணம் கிடைக்கும்போது எல்லாம் வாங்கி சேமித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முதலீட்டாளர்களின் உறுதியான அறிவுரையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews