ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை.. எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் இரண்டு நாள் ஏறினால் ஒரு நாள் இறங்கி மீண்டும் அதே விலை வந்து விடுகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். ஜூன் மூன்றாம் தேதி ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.5580 என விற்பனையாகி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து இன்று மீண்டும் அதே ரூ.5580 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. அதிகபட்சமாக 5605 வரை சென்று அதன் பின்னர் மீண்டும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை கடந்து செல்ல நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து மக்களுக்கு போக்கு காட்டி வருகிறது என்பதும் இதனை அடுத்து தங்கத்தை இப்போது வாங்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்துடன் மக்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் விலை ஏற்ற இறக்கத்தை பற்றி கவலைப்படாமல் எந்த விலையில் வேண்டுமானாலும் வாங்கலாம் என்றும் குறையும்போது கொஞ்சம் அதிகமாக வாங்கிக் கொள்ளலாம் என்பதே முதலீட்டு ஆலோசகர்களின் அறிவுரையாக உள்ளது.

தங்கம் எந்த விலையில் வாங்கினாலும் அது இன்னும் சில வருடங்கள் கழித்து நிச்சயம் லாபத்தை கொடுக்கும் ஒரு முதலீடாகவே இருக்கும் என்றும் எனவே தங்கத்தில் முதலீடு செய்வதற்கு எந்த விதமான யோசனையும் தேவையில்லை என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது.

தங்கம் விலை தற்போது அமெரிக்க மார்க்கெட் காரணமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை மாற்றினால் கண்டிப்பாக தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாத நிலையில் அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டியை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடந்தால் நிச்சயம் தங்கம் விலை கண்டிப்பாக உயரும் என்றே கணிக்கப்படுகிறது.

எனவே தங்கத்தை அவ்வப்போது பணம் இருக்கும் போதெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு முதலீடு செய்வது கண்டிப்பாக எதிர்காலத்தில் மிகப்பெரிய லாபத்தை தாரும் ஒரு அம்சமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...