இமெயில் எழுத உதவும் AI டெக்னாலஜி.. ஜிமெயில் அறிமுகம்..!

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் ஜிமெயில் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது ஜிமெயிலில் AI டெக்னாலஜி பயன்படுத்தப்படுவதாகவும், இனிமேல் இமெயில் எழுதுவதற்கு யோசிக்க தேவையில்லை என்றும் இந்த AI டெக்னாலஜி நீங்கள் என்ன இமெயில் அனுப்ப விரும்புகிறார்களோ அதற்கு உதவும் என்றும் கூறப்படுகிறது.

ஜிமெயிலில் இந்த அம்சம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இடம்பெறும் என்றும், “ஹெல்ப் மீ ரைட்” என்ற புதிய AI தொழில்நுட்பத்தை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் செய்தி வெளியாகியுள்ளது. பயனர்கள் மின்னஞ்சல்களை விரைவாகவும் எளிதாகவும் எழுத உதவும் வகையில் இந்த அம்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெல்ப் மீ ரைட் அம்சத்தைப் பயன்படுத்த, புதிய இமெயிலை எழுத தொடங்கியவுடன் “ஹெல்ப் மீ ரைட்” என்பதை கிளிக் செய்யவும். உடனே நீங்கள் எதைப் பற்றி எழுத விரும்புகிறீர்கள் என்பதற்கான சிறிய விளக்கத்தை கேட்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் “நன்றி மின்னஞ்சல்” அல்லது “வேலை விண்ணப்பக் கடிதம்” என அதில் பதிவு செய்தால் உடனே நன்றி மற்றும் வேலை விண்ணப்ப இமெயிலை அதுவே உங்களுக்கு எழுதி கொடுத்துவிடும்.

மேலும் ஹெல்ப் மீ ரைட் மூலம் இமெயில் எழுதி முடித்தவுடன் உங்கள் தேவைகளுக்கு ஏற்றவாறு இமெயிலை திருத்தும் வசதியும் உண்டு. நீங்கள் மின்னஞ்சலின் தொனியை மாற்றலாம், தகவலைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம் மற்றும் நீங்கள் விரும்பும் வேறு எந்த மாற்றங்களையும் செய்யலாம். உங்களுக்கு இமெயில் திருப்தி அடைந்தால் உடனே ‘அனுப்பு’ என்பதை கிளிக் செய்யலாம். ஹெல்ப் மீ ரைட் என்ற அம்சம் மின்னஞ்சல்களை எழுதும் நேரத்தைச் சேமிக்க உதவும்.

ஹெல்ப் மீ ரைட் அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய சில கூடுதல் விவரங்கள் இதோ:

* இந்த அம்சம் கூகிளின் மெஷின் லேர்னிங் முறையை பின்பற்றுகிறது. நீங்கள் உள்ளிடும் உரையின் பொருளைப் புரிந்துகொண்டு உங்கள் கோரிக்கையுடன் தொடர்புடைய இமெயிலை அதுவே உருவாக்கிவிடும்.

இமெயிலின் தொனி, நீளம் மற்றும் நீங்கள் தரும் விவரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும். இமெயில் தயாரித்து முடிந்தவுடன் அதுகுறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்க உங்களை அனுமதிக்கிறது. அதன்பின் அதில் மாற்றம் வேண்டுமானாலும் செய்து தரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews