’விக்ரம்’ போல தான் ‘தக்லைஃப்’.. கமல் சிறப்பு தோற்றம் தான்.. சிம்பு தான் மெயின் ஹீரோ..!

  கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று,  ஒரு தயாரிப்பாளராக கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. ஆனால், அந்த படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனின் பங்கு மிகவும்…

kamal simbu

 

கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று,  ஒரு தயாரிப்பாளராக கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. ஆனால், அந்த படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனின் பங்கு மிகவும் குறைவுதான் என்பதுதான் திரை விமர்சகர்களின் கருத்தாக இருந்தது.

முதல் பாதியை பொருத்தவரை, கமல்ஹாசன் ஆரம்பத்தில் ஒரு பத்து நிமிடம், அதன் பிறகு கடைசி பத்து நிமிடம் தான் வருவார். இடையிலுள்ள அனைத்து காட்சிகளும் பகத் பாசிலுக்கான காட்சிகளாக இருந்தது. அதேபோல், இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதியின் பங்கு தான் அதிகமாக இருந்தது. எனவே, கமல்ஹாசன் இந்த படத்தில் ஒரு கூடுதல் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்திருந்தார் என்பது படத்தை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு தெரியும்.

அதே போல் தான், ‘தக்லைஃப்’ திரைப்படத்திலும் கமல்ஹாசன் கூடுதல்  சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருப்பதாகவும், இந்த படம் முழுக்க முழுக்க சிம்புவின் படம் என்றும், சிம்பு தான் இந்த படத்தின் ஹீரோ என்றும் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள நிலையில், கமல்ஹாசனுக்கு இந்த படத்தில் ஜோடியே இல்லை என்றும், அவர் கூட சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில் “இரண்டு ஹீரோயின்களும் என்னிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை” என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அது மட்டும் இன்றி, சிம்புவுக்கு படத்தின் திரைக்கதையில்  கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க, கமல்ஹாசனை மணிரத்னம் அவர்களிடம் பரிந்துரை செய்தார் என்றும், இதனால் கமல்ஹாசனை விட சிம்பு தான் இந்த படத்தில் அதிக காட்சிகள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் போல் தான், ‘தக்லைஃப்’ திரைப்படமும் ஒரு கமல்ஹாசனின் படமாக பெயரளவுக்கு இருந்தாலும், இது முழுக்க முழுக்க சிம்புவின் படம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை படம் வெளியாகும் போது தெரிந்து கொள்வோம்.