மகள் திருமணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள்.. ஐசரி கணேஷின் நெகிழ்ச்சியான செயல்..!

  பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணம் நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், இன்று வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களை ஐசரி கணேஷ்…

isari ganesh

 

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணம் நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்ற நிலையில், இன்று வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகள் வழங்கி, அவர்களை ஐசரி கணேஷ் கௌரவித்த நிகழ்ச்சியான தகவல் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரரான ஐசரி கணேஷ் தனது மகளுக்கு சினிமாத்துறை இல்லாத மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த லஷ்வின் குமார் என்பவரை மருமகனாக தேர்வு செய்தார்.

தனது மகளை நன்றாக வைத்து கொள்ள வேண்டும் என்ற ஒரே தகுதியை மட்டுமே அவர் பார்த்திருப்பதாகவும், பணம், கௌரவம் ஆகியவற்றை அவர் பார்க்கவில்லை என்று கூறப்படுவதை அடுத்து, அவருக்கு மரியாதை மிகுந்தது.

இந்த நிலையில் தற்போது மகள் திருமணத்தை ஒரு பக்கம் பிரம்மாண்டமாக நடத்திய அவர், இன்று நடைபெற்ற வரவேற்பு விழாவில் 1500 மேற்பட்ட ஆதரவற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களை வரவழைத்து, அவர்களுக்கு பாட்டு மற்றும் நடன போட்டிகளை வைத்து, அவர்கள் அனைவருக்கும் விருந்து அளித்து, பரிசுகளையும் வழங்கி உள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மகள் திருமணத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களை அழைத்து வந்து அவர்களை மகிழ்வித்ததை அடுத்து, வந்திருந்த அனைவரும் அந்த மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.