துணிவு படத்திற்காக கலத்தில் இறங்கிய அஜித்! டப்பிங் பணியை முடித்ததாக தகவல்!

அஜித் வலிமை படத்தை தொடர்ந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து மிகப் பெரும் பொருட்செலவில் படம் உருவாகி வருகிறது.

ரஜினி படத்தில் இணைந்த இளம் ஹீரோயின் ! யாரு தெரியுமா?

கடைசி கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் முழுமையான நெகட்டிவ் ரோலில் அஜித் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகஉள்ளது .இந்த படத்தின் ஒவ்வொரு அப்டேட்களும் அடுத்து வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.

ajth thunivu

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வரும் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

விக்னேஷ் சிவனை தொடர்ந்து மீண்டும் பில்லா இயக்குனருடன் இணையும் அஜித்! தல மாஸ் அப்டேட் தான்!

சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்துக்காக டப்பிங் பேசி வருவதாக போட்டோவுடன் மாஸான தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் தனது டப்பிங் வேலைகளை முடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.