பொழுதுபோக்கு

AK 63-ல் அஜீத் கதாபாத்திரம் எப்படி? வெளியான ரகசிய தகவல்

தமிழ் சினிமாவில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜீத் தொடர்ந்து மென்மையான காதல் கதை கொண்ட படங்களிலேயே நடித்து வந்தார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்த படங்கள் சுமாரான வெற்றியையே பதிவு செய்தது. ஆனால் ஆசை, காதல் கோட்டை போன்ற படங்கள் அஜீத்தை பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமடையச் செய்தது. தொடர்ந்து நீ வருவாய் என, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் போன்ற படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து குடும்பங்கள் கொண்டாடும் நடிகராக உருவெடுத்தார்.

மேலும் அமர்க்களம், தீனா போன்ற படங்களில் குடும்பப் பாங்கிலிருந்து ஆக்சனுக்கு மாற இளைஞர்கள் மத்தியில் தல அஜீத் என புகழப்பட்டார். தொடர்ந்து ஆக்சன், கமர்ஷியல் படங்களில் நடித்து உச்ச நடிகராக மாறினார். பில்லா படம் அஜீத்தின் மாஸைக் காட்டியது. இப்படி திரையுலகில் ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும் தானாக செதுக்கிய அஜீத் இரட்டை வேடங்களிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் ஏடாகூடமாக நடித்த சுஜாதா.. கடிந்து கொண்ட பாலச்சந்தர்.. கேரியரை மாற்றிய அவள் ஒரு தொடர்கதை
பெரும்பாலும் இவர் இரட்டை வேடங்களில் நடித்த படங்களான வாலி, அட்டகாசம், வரலாறு, வில்லன் போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இப்படி அஜீத்துக்கு கைகொடுத்த இரட்டை வேடங்கள் படங்கள் போன்று தற்போது மீண்டும் அதுபோன்றதொரு கதையில் நடிக்கவிருக்கிறார்.

அஜீத் தற்போது இயக்குநர் மகிழ்திருமேனியின் விடா முயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விறுவிறுவென நடக்கும் இப்படத்தின் ஷுட்டிங் நடைபெறுவதால் இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து அஜீத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் GOOD BAD UGLY படத்தில் நடிக்க உள்ளார். அஜீத்தின் 63 வது படமாக உருவாகும் இதில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மூன்று கதாபாத்திரங்களிலும் பாடி லாங்குவேஜ் மாற்றி நடிக்கப் போவதாகவும், இதில் மொட்டைத் தலையுடன் ஒரு வில்லத்தனமாக கதாபாத்திரம் உள்ளதாகவும் ரகசிய தகவல் கசிந்துள்ளது. அடுத்த வருடம் பொங்கலுக்கு தல ரசிகர்கள் தரமான சம்பவத்திற்கு தயாராகி விட்டனர் என்பதை GOOD BAD UGLY பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Avatar photo
John A

ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.