மலையாளத்தில் ஏடாகூடமாக நடித்த சுஜாதா.. கடிந்து கொண்ட பாலச்சந்தர்.. கேரியரை மாற்றிய அவள் ஒரு தொடர்கதை!

இலங்கையில் பிறந்து வளர்ந்து பின் கேரளாவிற்கு குடிபெயர்ந்து மலையாள சினிமா உலகில் அறிமுகமாகி பின் தமிழ் சினிமாவைக் கலக்கியவர் தான் சுஜாதா. அவள் ஒரு தொடர்கதை என்னும் பெண்கள் போற்றும் பாலசந்தரின் காவியத்தில் நடித்து அப்போது வீட்டை விட்டு வரவே பயந்த பெண்களுக்கு முன்னுதாராணமாகத் திகழ்ந்தார் சுஜாதா. போலீஸ் ஸ்டேஷன் என்ற மலையாள நாடகத்தில் அறிமுகமாகி அதன்பின் தபஷ்னி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

கடைசிவரை ஒரு புரியாத புதிராகவே தன்னுடைய வாழ்க்கையை தனிப்பட்டதாக அமைத்துக் கொண்ட சுஜாதா நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இவர் மலையாளப்படங்களில் நடிக்கும் போது புனர்ஜென்மம் என்ற வயது வந்தோர் படத்தில் நடித்தார். இந்தப் படம் சிக்கலான உறவுமுறைகளைப் பற்றி பேசிய படம். கணவன்-மனைவிக்கிடையே நடக்கும் தாம்பத்யம் பற்றிய படமாக இருந்தது. இதில் சுஜாதா கிளாமராக நடித்திருந்தார்.

இந்தப் படம் வெளிவந்த போது, அவள் ஒரு தொடர்கதை படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் 1972-ல் இவரை அறிமுகம் செய்தார். சென்னையில் புனர்ஜென்மம் படம் ஓடிக் கொண்டிருக்க விஷயம் பாலச்சந்தரின் காதுகளுக்குப் போனது. உடனே கோபமான கே.பாலச்சந்தர் இனி இதுபோன்றதொரு படங்களில் நடிக்காதே. அவள் ஒரு தொடர்கதை படம் ரிலீஸ் ஆகும் வரையில் நீ எந்த பத்திரிக்கைக்கும் கிளாமர் போஸ் கொடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.

விஜய், அஜீத்துக்கு மிஸ் ஆன மருதமலை.. காமெடியில் பங்கம் பண்ணிய இயக்குநர் சுராஜ்
சுஜாதாவும் கே.பாலச்சந்தரின் கண்டிஷனை ஏற்றுக் கொண்டு இனி அது போன்றதொரு படங்களில் நடிக்க மாட்டேன் என்று உத்திரவாதம் அளித்திருக்கிறார். ஒருவழியாக படம் வெளியாகி சக்கைப் போடு போட்டது. சுஜாதாவை தங்கள் வீட்டுப் பெண்ணாகவே மக்கள் கொண்டாடத் தொடங்கினர்.

அதுவரை சுஜாதா மேலிருந்த கெட்ட இமேஜ் உடைந்து பாலச்சந்தர் எனும் சினிமா சிற்பியால் சிறந்த நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தமிழில் பல படவாய்ப்புகள் குவிந்தது. அதில் அன்னக்கிளி பற்றி சொல்லவே வேண்டாம். இவ்வாறு தென்னிந்திய மொழிகளில் ஹீரோயின், குணச்சித்திரம் என பன்முகத்திறமை கொண்ட நடிகையாக விளங்கிய சுஜாதா தனது 58-வது வயதில் உயிரிழந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...