சிவகார்த்திகேயனின் SK 24 படத்தில் இணையும் பெரிய புள்ளி… இதை யாரும் எதிர்பார்க்கலியே…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது…

sk

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு மெல்ல மெல்ல கமர்சியல் திரைப்படங்களான வேலைக்காரன், அயலான், சீமராஜா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப் பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்திலும் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து விநாயக் சந்திரசேகர் இயக்கும் எஸ்கே24 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்னவென்றால் இந்த படம் அப்பா மகன் உறவை எடுத்துச் சொல்லும் படமாக இருக்கும் எனவும் சிவகார்த்திகேயனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் விஜய் மோகன்லால் காம்போ போல சிவகார்த்திகேயன் மோகன்லால் காம்போ வருமா என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.