8 அடியில் ஒரு ஐபோன்.. அமெரிக்க யூடியூபர் செய்த சாதனை..!

ஐபோன் என்பது பொதுவாக ஆறு முதல் ஏழு இன்ச் வரை தான் இருக்கும் அதாவது அரை அடி அளவில்தான் இருக்கும். ஆனால் நியூயார்க்கை சேர்ந்த யூடியூபர் ஒருவர் எட்டு அடியில் அதாவது ஒரு மனிதனின் உயரத்தை விட அதிகமான உயரத்தில் ஒரு ஐபோனை தயாரித்து அசத்தியுள்ளார்.

ஐபோன் இதுவரை தயாரித்த ஃபோன்களில் ஆறு புள்ளி ஏழு இன்ச் கொண்ட iphone pro max என்பதுதான் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நியூயார்க்கை சேர்ந்த மேத்யூ என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு 6 அடி அளவில் ஒரு ஐபோனை வடிவமைத்து அசத்தியிருந்தார்

இது குறித்த வீடியோக்களை அவர் தனது யூடியூப் சேனலில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இந்த நிலையில் தற்போது அவரது சாதனையை அவரே முறியடிக்கும் வகையில் எட்டு அடியில் ஒரு ஐபோனை செய்து உள்ளார்

இந்த ஐபோனில் மற்ற ஐ ஃபோனில் உள்ள அனைத்து வசதிகளும் உள்ளது. அதாவது புகைப்படம் எடுப்பது, ஆப்பிள் பே மூலம் பணம் செலுத்துவது, பல்வேறு செயலிகளை பயன்படுத்துவது, கேம் விளையாடுவது உட்பட அனைத்தையும் இதில் செய்யலாம்

ஆனால் இந்த ஐபோன் தயாரிப்புக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபோனை வடிவமைத்தவுடன் அவர் ஒரு தள்ளு வண்டியில் வைத்து நியூயார்க் நகர வீதியில் கொண்டு சென்றபோது பொதுமக்கள் அந்த போனை ஆச்சரியமாக பார்த்தனர்
அப்போது அந்த போனின் மூலமே அவர் முக்கிய இடங்களையும் பொதுமக்களையும் போட்டோ எடுத்து அந்த புகைப்படத்தை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்துள்ளார். இந்த மெகா சைஸ் போனை பல்வேறு சாதனங்கள் மூலம் அவர் உருவாக்கியதாகவும், அதற்கு அவரது நண்பர்கள் உற்ற துணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

முதலில் பிரேமை வடிவமைத்ததாகவும் அதன் பின்னர் டச் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் டிவியை பொருத்தியதாகவும் அதனுடன் மேக் மினியை இணைத்துள்ளதாகவும் அதன் பிறகு கடைசியாக ஐபோனில் உள்ள அனைத்து செயலிகளையும் இணைத்ததாகவும் அவர் பேட்டி ஒன்று கூறியுள்ளார்

ஐபோனில் இருப்பது போலவே வால்யும் பட்டன், மியூட் பட்டன், லாக் பட்டன் என்ற அனைத்து வசதிகளும் இதில் உண்டு என்றும் இந்த ஃபோனில் பின்பக்க கேமிரா மூலமும் செல்பி கேமரா மூலமும் புகைப்படம் எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த போனின் வீடியோ மேத்யூவின் யூடியூப் சேனலில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ இதோ

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews