ஓட்டுநர் இல்லாத டாக்ஸி சேவை இந்தியாவில் வருகிறதா?..

உலகில் முதல் முறையாக அமெரிக்காவில் உள்ள மோர்கண் டவுன் நகரில் கடந்த 1975 ஆம் ஆண்டு அறிமுகமான போக்குவரத்து சேவை தான் இந்த பாட் டாக்ஸி சேவை. ஓட்டுனர் இல்லாத டாக்ஸி சேவை என்பது முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்க கூடியது ஆகும். வாகனத்தால் ஏற்படும் சாலை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும்,சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதிநவீன டேக்ஸி சேவையாக இந்த டாக்ஸி சேவை பார்க்கப்படுகிறது.

உலகளவில் வெறும் ஐந்து நிறுவனங்கள் மட்டுமே பாட் டாக்ஸி வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதுவும் தற்போது உலக அளவில் 8 நாடுகளில் மட்டுமே இந்த டாக்ஸி சேவை நடைமுறையில் உள்ளது.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிகளை அழைத்து செல்லும் இந்த டாக்ஸியில் ஒரே நேரத்தில் நான்கு முதல் ஆறு பேர் வரை பயணிக்கலாம் . இந்த டாக்ஸிகளுக்கு கம்பிகளை கொண்டு தனிப்பாதை அமைக்க வேண்டும் என்ற நிலையில் சில நாடுகளில் அவை மேலே மெட்ரோவை போல் பயணிக்கும் விதத்திலும் அமைந்துள்ளன.

இது பார்ப்பதற்கு கிட்டதட்ட ரோப் கார் சேவை போலவே இருக்கும். இந்த எலக்ட்ரிக் பாட் டாக்ஸி சேவை தற்போது அபுதாபி, சீனா, தென்கொரியா போன்ற நாடுகளில் அமலில் உள்ள நிலையில் இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைய உள்ளது . இந்த பாட் டாக்ஸி வழித்தடம் தான் உலகிலேயே நீளமானது என்று கூறப்படுகிறது.

இப்படி லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக அறிமுகமாக இருக்கும் இந்த பாட் டாக்ஸி சேவை அடுத்த ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கூறப்படுகிறது . ஜுவாரிலிருந்து நொய்டாவரை சுமார் 14.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாட் டாக்ஸி வழித்தடம் அமைய இருக்கிறது. இந்த வழித்தடங்கள் சுமார் 12 நிறுத்தங்கள் இடம் பெற உள்ளன.

நொய்டா விமான நிலையத்தின் முதற்கட்ட பணிகள் அடுத்த ஆண்டு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு விமான நிலையம் திறந்து வைக்கப்படும் . இந்த நேரத்தில் கூடவே பாட் டாக்ஸி சேவையையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு சுமார் 7010 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தினமும் சுமார் 37,000 பேர் இந்த சேவையை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட் தேர்வில் முதலிடத்தை பிடித்த தமிழக மாணவன்! குவியும் வாழ்த்துக்கள்!

எதிர்காலத்தில் உத்தர பிரதேச மக்களின் வரவேற்பை தொடர்ந்து இந்தியாவின் பெரு நகரங்களான மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களிலும் பாட் டாக்ஸி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews