விக்னேஷ்சிவன் கதையில் நடிக்கபோகும் அந்த இயக்குனர்… இது என்னடா பிரதீப்புக்கு வந்த சோதனை…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

பின் தான் இயக்கும் படங்களில் தானே நடிக்க வேண்டும் எனும் ஆசைப்பட்ட பிரதீப் லவ் டுடே திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இவரெல்லாம் ஹீரோவா என நினைத்த நேரத்தில் இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

கலாபவன் மணியை காவு வாங்கிய பீர் : 9 வருடத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்

இப்படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகின. இதனை தொடர்ந்து இவர் தற்போது நயனின் கணவரான விக்னேஷ் சிவன் கதையில் தான் இயக்குனாராகவும் கதாநாயகனாகவும் நடிக்க உள்ளார். இப்படத்தினை முதலில் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கவிருந்தனர்.

ஆனால் பட்ஜெட் கருதி இப்படத்தில் இருந்து இந்நிறுவனம் விலகி விட்டது. பின் இப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஆனால் இன்னும் கதையில் சுவாரஸ்யம் கொண்டு வர நினைத்த இயக்குனர் இப்படத்தில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் எஸ்.ஜே. சூர்யாவை நடிக்க வைத்துள்ளனர்.

“மனசுல பெரிய அழகின்னு நெனப்போ..? அவங்க மாயா இல்ல ஆயா..!“ வெளுத்து வாங்கிய ஷகீலா

இதனை தொடர்ந்து இப்படத்தில் மற்றுமொரு முக்கிய பிரபலமும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். மிஷ்கின் அஞ்சாதே, சைக்கோ போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர்.

மிஷ்கின் பொதுவாக பெரிய இயக்குனர்களுடன் நடிக்கும் போது அவர்களுக்கு படமெடுக்க சொல்லி கொடுப்பார். வெளியே வந்து ட்ரோல் அடிப்பார். இந்நிலையில் இவர் தற்போது இப்படத்தில் நடிப்பது பிரதீப்பிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் தலைவலியாக அமையாமல் இருந்தால் சரிதான் என நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படுகிறது.

ஒரு கோடியை தானமாக அள்ளி வழங்கிய ராகவா லாரன்ஸ் : இப்படியா செய்வீங்க என திட்டிய மனைவி

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews