பிரபல நடிகருக்கு மணிரத்னம் செஞ்ச துரோகம்… அட இப்படிபட்டவரா இவர்!..

மணிரத்னம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் தமிழில் பகல் நிலவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராய் அறிமுகமானார். பின் மெளன ராகம், நாயகன், பம்பாய் போன்ற பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்தார்.

இவர் வித்தியாசமான கதைகளை திரைப்படங்களில் கொடுப்பவர். மேலும் இவரின் திரைப்படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் பொன்னியின் செல்வன்.

ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயனுடன் பொங்கல் ரேஸில் இணைந்த விஜய் சேதுபதி : வெளியான அசத்தல் அப்டேட்

இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சரித்திர கதைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் கமலின் 234வது திரைப்படமான தக் லைஃப் திரைப்படத்தினை இயக்கவுள்ளார். இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

இவரின் மீது சமீபத்தில் பிரபல தயாரிப்பாளாரும் திரைப்பட விநியோகஸ்தரருமான மாணிக்கம் நாராயணன் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். அதன்படி கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தினை விநியோகம் செய்ததின் மூலம் தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்திருந்தார். மேலும் அதனால் பிரச்சினை ஏற்பட்டதாகவும், இருந்தாலும் தான் அதை மறந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கேரள வினியோக அனுமதியை கேட்டும் அதனை மணிரத்னம் தனக்கு தரவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகியது.

அதுக்கு மட்டும் நோ சொன்ன அஜீத்..! மேடையில் செய்த சம்பவத்தால் உறைந்த உச்ச நட்சத்திரங்கள்

ஆனால் மணிரத்னம் உணமையிலேயே  அப்படித்தான் போல. இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் ஆய்த எழுத்து. இப்படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் போன்ற நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் முதலில் சித்தார்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தான் நடிக்கவிருந்தாராம்.

ஸ்ரீகாந்த்தும் தனக்கு இப்படத்தின் மூலம் மிகப்பெரிய பெயர் கிடைக்க போகிறது என இருந்தாராம். ஆனால் மாதவன், சூர்யாவை வைத்து தினந்தோறும் போட்டோஷூட் நடந்ததாம். ஆனால் மாதவனுக்கான ரோல் என்னவென்று யாருமே சொல்லவில்லையாம். கடைசியில் அப்படத்தின் போஸ்டர் வெளியாகும்போது அதில் மாதவன், சூர்யா, சித்தார்த் என மூன்று பேர் படங்கள் மட்டுமே இருந்ததாம். மணிரத்னம் இப்படி ஸ்ரீகாந்த்துக்கு துரோகம் செய்துள்ளாராம்.

விஜய் ஹீரோ அவதாரம் எடுக்க நடிகர் பிரசாந்த் ஒரு முக்கிய காரணமா?

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.