விஜய் ஹீரோ அவதாரம் எடுக்க நடிகர் பிரசாந்த் ஒரு முக்கிய காரணமா?

தளபதி விஜய் நடிப்பில் கடந்த மாதம் லியோ திரைப்படம் வெளியாகி வசூலில் சக்கை போடு வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து மல்டி ஸ்டார் மூவியாக உலக அளவில் வெளியாகியிருந்தது. லலித் குமார் தயாரிப்பில் வெளியான லியோ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் என்று ரசிகர்களால் பெரிதும் நம்பப்பட்ட நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட சில சொதப்பல்களின் காரணமாக 1000 கோடி வசூலை எட்ட முடியாமல் போனது. சமீபத்தில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

இந்த வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அதாவது அப்பா, மகன் கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகன் கதாபாத்திரத்தில் 25 வயது உடைய இளைஞனாக விஜய் நடிக்க இருப்பதால் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜயின் முழு உடல் அமைப்பு ஸ்கேன் செய்யப்பட்டு அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்ட தளபதி 68 படத்தின் முதல் பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் நடத்தப்பட உள்ளதாகவும், சமீபத்தில் தாய்லாந்தில் இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் டைம் ட்ராவலை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளதால் இந்த திரைப்படம் தளபதி ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது நடிகர் பிரசாந்த் மற்றும் விஜய்யின் முதல் திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சினிமாவை பின்புலமாக கொண்ட ஒரே வயதுடைய இரண்டு முன்னணி ஹீரோக்களான தளபதி விஜய் மற்றும் பிரசாந்திற்க்கும் குழந்தை பருவத்தில் இருந்து பழக்கம் இருந்துள்ளது. அந்த நேரத்தில் தான் 1990 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இந்த படத்தின் வெள்ளி விழா மிக பிரமாண்டமாக சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் எப்படியாவது கலந்து கொண்டு நடிகர் பிரசாந்தை பார்த்து விட வேண்டும் என்று தளபதி விஜய் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் தளபதி விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தல அஜித்திற்காக பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் உருவாக்கிய 4 திரைப்படங்கள்?

தன் குழந்தை பருவத்து நண்பன் ஹீரோவாக வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சி அடைந்த விஜய் அவருக்கு வாழ்த்து கூற வேண்டும் என நினைத்துள்ளார். ஆனால் பிரசாந்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்காததால், தானும் ஒரு ஹீரோவாக மாறி பிரபலம் அடைய வேண்டும் என்ற ஆசை தளபதி விஜய்க்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுவரை எஸ் ஏ சந்திரசேகரின் இயக்கத்தின் வெளியாகும் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் ஹீரோவாக முடிவெடுத்து தன் தந்தையிடம் அந்த விருப்பத்தை கூறினார். இதன் பின் தளபதி விஜய் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அன்று தொடங்கிய தளபதி விஜயின் சினிமா பயணம் இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோவாக விஜய் பிரபலத்தின் உச்சியில் உள்ளார். மேலும் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தை தன்வசப்படுத்தி இருக்கும் தளபதி விஜய் அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே நேரத்தில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து நடிகர் பிரசாந்த் தற்பொழுது பட வாய்ப்புகளை இழந்து தளபதி விஜய் நடிக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைந்து தன் திரை வாழ்க்கைக்கு கம்பேக் கொடுக்க உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...