அதுக்கு மட்டும் நோ சொன்ன அஜீத்..! மேடையில் செய்த சம்பவத்தால் உறைந்த உச்ச நட்சத்திரங்கள்

2010-ம் வருடம். பாசத் தலைவனுக்குப் பாராட்டுவிழா என்ற பெயரில் அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் ரஜினி, கமல், அமிதாப் பச்சன் உட்பட இந்திய சினிமாக்களின் ஜாம்பவான்கள் பலர் கலந்து கொண்டனர். உணர்ச்சிமயமாகப் போய்க் கொண்டிருந்த அந்த விழாவில் அஜீத்தை பேச அழைக்க விழா மேடையே பரபரப்பானது.

அதில் அஜீத் பேசும் பொழுது, “அய்யா, நிகழ்ச்சிகளுக்கு நடிகர், நடிகைகளை கட்டாயப்படுத்தி வரவழைக்கிறார்கள். வராவிட்டால் மிரட்டுகிறார்கள். நீ தமிழன் இல்லையென்று பிரச்சாரம் நடக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் அய்யா.
எங்களுக்கு அரசியல் வேண்டாம். பிரச்சினைகளை அரசு பார்த்துக்கொள்ளும். நாங்கள் நடிப்பை பார்க்கிறோம் அய்யா” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

விழாவில் கலைஞரின் பக்கத்தில் இருந்த ரஜினி என்ன நினைத்தாரோ, எழுந்து கைதட்டி பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தார். வில்லங்கம் அங்கேதான் ஆரம்பமானது. அடுத்த நாளே ரஜினிக்கும், அஜீத்துக்கும் ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள், விமர்சனங்கள் வெளியாகின.

திரைப்பட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு இருவர் மீதும் நடவடிக்கை எடுத்தது.
அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ரஜினிக்கு ‘கண்டனம்’ தெரிவிக்கப்பட்டது. அப்போதைய பெப்ஸி தலைவர் குகநாதன், “நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். மிரட்டியும் கேட்போம். கேட்காதவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்…” என்று பேசினார்.

அஜீத்திடம் “வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை விட்டுட்டு ஆக வேண்டியதை பாருங்க.. எல்லாரும் ரிலாக்ஸ் ஆயிரலாம்..” என்ற ரீதியில் சமாதான முயற்சிகள் நடந்தன. ஆனால் அஜீத் எதற்கும் இடம் கொடுக்காமல் வருத்தம் தெரிவிக்க மறுத்து விட்டார்.

சூப்பர் ஸ்டார் முதல் ராக் ஸ்டார் வரை.. தலைசுற்ற வைக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் குடும்பச் சங்கிலி

இதற்கிடையில் ரஜினி, அஜித், கலைஞர் சந்திப்பு ஒன்று நடந்தது. சந்திப்பிற்குப் பிறகு கலைஞர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார், அதில் ‘எனக்கு திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவில் பலரும் அள்ளித்தெளித்த அன்பு மலர்களினிடையே அஜித் என்ற தும்பை மலரும் என் மேல் விழுந்தது. தும்பை மலர் ஒரு மாசற்ற மலர். எனினும் எனக்கு எதிராக விழுந்த மலரோ என்று ஐயப்பாட்டை எழுப்பிய பத்திரிகைகள் அதை பூதாகரமாக்கி விட்டனர்.

இதற்கு முன்பு நடந்த நிகழ்வுகளில் திரையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றிதான் அஜீத் அன்று விளக்கமளித்தார். கலையுலகில் கலகம் ஏற்படுத்தலாம் என காத்திருந்தோருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது’ என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார் கலைஞர்.

அதனைத் தொடர்ந்து அஜீத். அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்து, படப்படிப்புக்கும் கிளம்பி விட்டார். ‘மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிடமாட்டோம்’ என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்க அதற்கும் அஜீத் அசரவில்லை. ஏனென்றால் அப்போது அவரின் கால்ஷீட்டை வாங்கியிருந்தது தயாநிதி அழகிரியின் நிறுவனம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews